அறுவை சிகிச்சையின்போது பல் செட்டை முழங்கிய முதியவர்.. அடக்கடவுளே! பின்பு நடந்ததை பாருங்க

லண்டனை சேர்ந்த 77 வயதாகும் ஜாட் என்பவர் கடந்த சில மாதங்களாக கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கிடையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வயிற்றில் கட்டி இருப்பதாக கூறியுள்ளனர். பின்பு அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம் என்று கூறியுள்ளனர்.

அறுவை சிகிச்சைக்காக முதியவர் பிரிட்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய தொடங்கியுள்ளனர்.

பின்பு வெற்றிகரமாக அந்த கட்டிகள் நீக்கப்பட்ட நிலையில் அந்த முதியவர் வீடு திரும்பியுள்ளார். ஆனால் அவருக்கு வயிற்று வலி போய் தொண்டை வலி வந்தது சில நாட்களாக எதையும் சாப்பிட முடியாமல் ரொம்ப அவதிக்குள்ளானார். பிறகு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த போது அவரது தொண்டையில் பல்செட் வடிவிலான ஏதோ ஒன்று இருந்துள்ளது.

இதைப்பற்றி அவரிடம் மருத்துவர்கள் பேசிய பொழுது அதற்கு அந்த முதியவர் தன் வாயில் பல்செட் உள்ளதாகவும் அதை அறுவை சிகிச்சையின்போது தெரியாம முழுங்கிய தாகவும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் ஏன் இதை முன்கூட்டியே எங்களிடம் சொல்லவில்லை என்று முதியவரிடம் கேட்டனர்.

இதுமாதிரி ஏதாவது பல் செட் கட்டி இருந்தால் அறுவை சிகிச்சையின்போது சொல்லி இருந்தால் நாங்கள் அதனை அகற்றி விட்டு உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்து இருப்போம் என்று மருத்துவர்கள் கூறினர். இவ்வாறு தெரிவிக்காததால் உங்களுக்கு தான் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டதாக பிரிட்டன் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Comment