திரும்பவும் ஹீரோயினாக நடிக்க ஆசைப்படும் நடிகைகள்.. ஆன்ட்டி வயசாயிடுச்சி கலாய்க்கும் ரசிகர்கள்..

கொரோனா தொற்றால் கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து பல்வேறு விதமான பாதிப்புகளை அடைந்துள்ளார்கள். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி உள்ளார்கள். சில பிரபலங்கள் கொரோனா ஊரடங்கை பயனுள்ளதாக பயன்படுத்தி உடல் எடையை குறைக்க பயிற்சிகள் மேற்கொண்டு உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக உள்ளார்கள்.

குஷ்பூ: தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. சினிமாவில் ஒல்லியாக உள்ள ஹீரோயின்களை மட்டுமே ரசிகர்கள் விரும்புவார்கள் என்ற ட்ரெண்டை மாற்றியவர் குஷ்பூ. இவருக்காக தமிழ் ரசிகர்கள் கோவில் கட்டினார்கள்.

தற்போது 51 வயதாகும் குஷ்பூ 20 கிலோ உடல் எடையை குறைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். குஷ்பூ கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகவும், மிக அழகாகவும் மாறியுள்ளார்.

சமீரா ரெட்டி: பாலிவுட்டில் பிரபல நடிகையான சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், வெடி போன்ற படங்களில் நடித்துள்ளார். திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான சமீரா ரெட்டி உடல் எடை அதிகமானார்.

இதனால் பல பேர் சமீராவை கேலி செய்து வந்தார்கள். அதன்பிறகு யோகா, உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்துள்ளார். சமீரா 92 கிலோவில் இருந்து 82 கிலோவிற்கு தற்போது வந்துள்ளார்.

actress weight loss
actress weight loss

ஸ்மிருதி இரானி: தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் கலக்கியவர் ஸ்மிருதி இரானி. அதன் பின்னர் பாஜகவில் இணைந்து அரசியலுக்கு வந்த அமைச்சராகவும் தற்போது அசத்தி வருகிறார். இந்த நிலையில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து அனைவருக்கும் ஆச்சரியப்படுத்தினார். அவரது உடல் எடைக் குறைப்புக்கு அனைவரும் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் தெரிவித்தனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்