Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
பண்ணுனா லவ் மேரேஜ்தான் என்ற நடிகை.. 30 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணமாக வேண்டியவ இன்னமும் கோலம் போட்டுட்டு இருக்கா!
தமிழ் சினிமாவில் எக்ஸ்பயரி டேட் முடிந்து இன்னமும் நாயகியாக நடித்து வருபவர் தான் அந்த நடிகை. காதலித்து திருமணம் பண்ணுவதில் அந்த நடிகைக்கு பெரிய விருப்பமாம்.
ஆனால் பாருங்க. வயசு தான் இடம் கொடுக்கல. அவர் வயசுல இருந்து நடிகர்கள் எல்லாம் திருமணம் செய்து கொண்டதால் தற்போது நடிகை யாருமே இல்லாமல் தனிமையில் தவித்து வருகிறாராம்.
தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் விரல் நடிகருடன் கிசுகிசுக்கப்பட்ட இந்த நாயகி, பிறகு அக்கட தேச உயரமான நடிகர் ஒருவருடன் காதல் ஏற்பட்டு லிவிங் டுகெதர் முறையில் அவ்வப்போது வாழ்ந்து வந்தார் என்ற செய்தி அனைவருக்கும் தெரிந்ததுதான்.
எப்படியாவது அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் பெற்றோர்கள் திடீரென ஒரு தொழிலதிபரை மாப்பிளையாக கொண்டு வந்தனர்.
சரி, இதுதான் தலையெழுத்து என நிச்சயம் செய்து கொண்ட அந்த நாயகி திடீரென அந்த உயரமான நடிகரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அந்த நிச்சயதார்த்தத்துடன் கல்யாணத்தை நிறுத்தி விட்டாராம்.
அந்த நடிகர் நமக்கு சப்போர்ட் செய்கிறார் என மீண்டும் அந்த நடிகர் பக்கம் செல்ல அவரும் கொஞ்சநாள் இவருடன் சுற்றியுள்ளார். பின்னர் நல்ல பணக்கார வீட்டுப்பெண் கிடைத்தவுடன் அந்த நடிகர் இந்த நடிகையை துரத்திவிட்டு சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த செய்தியை கேட்ட உடனேயே அந்த நடிகையை சமூக வலைதளங்களை விட்டு ஓட்டம் பிடித்தார். ஒரு மாதம் அழுது தீர்த்த பின் தான் சமூக வலைதளங்களுக்கு வந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இப்படியிருக்கையில் குடும்பத்தினர், நாங்களாவது மாப்பிள்ளை பார்க்கிறோம் என கேட்டுள்ளனர். ஆனால் குதித்தால் தலை கீழாகத்தான் குதிப்பேன் என கவுண்டமணி அடம் பிடிப்பதை போல திருமணம் என்று ஒன்று நடந்தால் அது காதல் திருமணம்தான் என அடித்துக் கூறி விட்டாராம்.
காலம் போன காலத்தில் இனி யார் உன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள் என குடும்பத்தினர் அந்த நடிகையுடன் கோபித்துக் கொண்டார்கள்.
இதையெல்லாம் கேட்கும்போது வடிவேலுவின் முப்பது வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆக வேண்டியவ இன்னமும் கோலம் போட்டுக்கிட்டு இருக்கா என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது.
