fbpx
Connect with us

Cinemapettai

திவாரி – அகர்வால் இணைந்து பிடித்த அசத்தல் கேட்ச். வீடியோ உள்ளே ! ஐபில் 2018 !

News | செய்திகள்

திவாரி – அகர்வால் இணைந்து பிடித்த அசத்தல் கேட்ச். வீடியோ உள்ளே ! ஐபில் 2018 !

ஐபில் போட்டிகளை பொறுத்தவரை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் அதிகளவு ரசிகர்களை வைத்துள்ள லீக் ஆக மாறிவிட்டது. நம்மில் பலருக்கு ஐபில் போட்டிகள் தான் சம்மர் விடுமுறை கொண்டாட்டமாகவே மாறி விட்டது. இந்த 11 வது சீஸனும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தான் சென்று கொண்டு இருக்கிறது. கப்பை அடிக்க வேண்டும் என ஒவ்வொரு அணியும் திட்டம் தீட்டி உழைத்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஒரு புறம் வழக்கம் போல சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் அசத்தினாலும் மறுபுறம் புதிய கேப்டன்களுடன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தாவுக்கு அசத்தி தான் வருகின்றது.

Kings XI Punjab

நேற்று இந்தூரில் நடைபெற்ற 38-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த பஞ்சாப் கடைசி ஓவர்களில் ராகுலின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்றது.

அசத்தல் கேட்ச்

முஜிபுர் ரஹ்மான் வீசிய 13வது ஓவரின் 5வது பந்தை ஸ்டோக்ஸ் எதிர்கொண்டார். பந்தை ஸ்டோக்ஸ் சிக்சர் அடிக்கும் வகையில் தூக்கி அடித்தார். ஆனால் பவுண்டரி அருகே நின்ற மாயங் அகர்வால், சரியான நேரத்தில் தாவி பிடித்தார். ஆனால் அவரால் பாலன்ஸ் செய்து சரியாக மைதானத்திற்குள் வர முடியவில்லை.

K XI PUNJAB

உடனே துரிதமாக சிந்தித்த அவர் அருகில் ஓடிவந்த சக வீரர் மனோஜ் திவாரி நோக்கி பந்தை வீசிவிட்டு எல்லைக்கோட்டை கடந்து விழுந்தார். இந்த பந்தை மனோஜ் திவாரி பிடிக்க, ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top