இயக்குநர் சற்குணம், நடிகர் விமல், நடிகை ஓவியா, சூரி என பலருக்கு அடையாளமாக மாறிப்போன படம் களவாணி.

தஞ்சை சுற்றுவட்டாரத்தில் நடக்கும் கதையை மையாகக் கொண்டு எடுக்கப்பட்ட `களவாணி’ படம் கடந்த 2010ம் ஆண்டு ஜூனில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. படத்தில் அறிவழகன் என்கிற அறிக்கியாகவே விமல் வாழ்ந்திருப்பார். சூரி உள்ளிட்டோருடன் சேர்ந்த அவர் அடித்த லூட்டிகள் படத்தை வேற லெவலுக்குக் கொண்டு சென்றன என்றே கூறலாம். அதிலும் கஞ்சா கருப்பு தற்கொலை முயற்சி செய்துகொண்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இப்போதும் ரசிகர்கள் மனதைவிட்டு அகலாத எவர்க்ரீன் காட்சி. அதேபோல், களவாணி படம் நடிகை ஓவியாவுக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. மகேஷ் என்கிற மகேஷ்வரி கேரக்டரில் ஓவியா செய்த குறும்புத் தனங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

அதிகம் படித்தவை:  இனி காசோலை பரிவர்த்தனைக்கு ஆப்பு...! எஸ்பிஐ கார்டு அதிரடி...!

இந்தநிலையில், ஏறக்குறைய 8 ஆண்டுகள் கழித்து களவாணி – 2 படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்துவிட்ட நிலையில், இயக்குநர் சற்குணத்துக்கும், தயாரிப்பாளர் நசீருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், ஷூட்டிங் தொடங்குவதில் இழுபறி நீடித்து வந்தது. இந்தநிலையில், பிரச்னைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டதாகவும், விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. களவாணி – 2 படம் `K2’ என்ற பெயராலேயே அறியப்படுகிறது. எனவே நாமும் அந்த பதத்தையே பயன்படுத்துவோம்.

மேலும் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தியாக K2 படத்தில் ஓவியாவும் இணைந்துள்ளார் என்ற செய்தியை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூரை மையமாக வைத்தே இந்த கதையையும் சற்குணம் ரெடி பண்ணியிருக்கார். ஆனால், K2 படம் களவாணி படத்தின் தொடர்ச்சியாக இருக்காது என்கிறார் ஹீரோ விமல். அதேநேரம், இந்த படத்தில் சூரி இல்லை. அவருக்குப் பதிலாக ஆர்.ஜே.விக்கி மற்றும் கஞ்சா கருப்பு ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  கோலிவுட்டில் தாறுமாறாக பட்டைய கிளப்பிய போலீஸ் நாயகர்கள்...

களவாணி படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் இதிலும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, விமலின் தாயாக நடித்திருந்த சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் இந்த படத்திலும் இருக்கின்றனர். மேலும் ஒரு சிறப்பாக படத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு இசையமைப்பாளர் இசையமைத்துள்ளனர். அதில், சண்டிவீரன் படத்தின் இசையமைப்பாளர் அருணகிரியும் ஒருவர் என்கிறது படக்குழு. K2-வில் ஓவியா இணைந்திருப்பது அவரது ஆர்மியினரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ஓவியா – விமல் ஆகியோர் பங்கேற்கும் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.