Tamil Cinema News | சினிமா செய்திகள்
16 விருதுகளை வென்ற கார்த்திக் சுப்புராஜ் அப்பா நடித்த குறும்படம்.. இணையதளத்தை தெறிக்க விடும் அகம் திமிறி
By
பெற்ற குழந்தையை கருணை கொலை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடும் நடுத்தர மக்களின் கதைக்களத்தை கொண்டுள்ளது ‘அகம் திமிறி’. அதாவது சிறுவயதிலேயே கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கான பண வசதி இல்லாத, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவர் கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று நீதிமன்றத்தை நாடுகிறார். ஒரு தாய் தந்தையின் இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு பின்னால் இருக்கும் வேதனைகளை வெளிப்படுத்தும் விதமாக அகம் திமிறியின் கதைக்களம் உருவாகி உள்ளது.
50 நிமிட குறும்படத்திற்காக, 16 விருதுகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளது. OTT தளத்தில் தற்போது இந்த படத்தை வெளியிட்டுள்ளனர். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, கைதட்டல்களை வாங்கி வருகிறது.
இயக்குனர் வசந்த் பாலசுந்தரம், பாலு மகேந்திராவின் கூத்துப்பட்டறையில் நடிப்பு, இயக்கத்தை கற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தர்மதுரை படத்தில் சீனுவிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார்.
இந்த குறும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கார்த்திக் சுப்புராஜ் தந்தையான கஜராஜ் நீதிபதியாக நடித்துள்ளார். நீதிபதி கருணைக்கொலைக்கு ஒத்துக்கொள்கிறாரா.? இல்லையா.? என்பது போன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆந்திராவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையாகவே ஆந்திர அரசு அந்த குழந்தைக்கு முழு பண உதவி செய்து குழந்தையை மீட்டு உள்ளனர்.
இது போன்ற உண்மை சம்பவத்தை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதற்காக இயக்குனர் மிக தத்ரூபமாக போராடி உள்ளார். நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது, டெல்லியில் தாதா சாகேப் பால்கே விருது, கொல்கத்தா திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், இயக்கம் உள்ளிட்ட 4 விருதுகள் என மொத்தம் 16 விருதுகளை வாங்கி சாதனை படைத்துள்ளது. OTT-யில் இப்போது ரிலீஸ் செய்திருக்கும் இந்த குறும்படம் விரைவில் யூடியூபிலும் வெளியிடுகின்றனர்.
