Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

7 வருடம் கழித்து நேருக்கு நேர் மோதிக் கொள்ளப் போகும் தல தளபதி.. திரையில் கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வருகிறது “பீஸ்ட்”. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட்லுக் செகண்ட் லுக் போஸ்டர்கள் இணைத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான “மாஸ்டர்” லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு அருமையான கதைக்களத்தை தந்திருந்தது குறிப்பிடதக்கது. நெல்சன் இயக்கத்தில் கோலமாவு கோகிலா அருமையான வெற்றியை பதிவு செய்திருந்தது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் இப்போது வரை வெளியிடப்படாமல் உள்ளது.

வலிமை அதே சமயத்தில் இயக்குனர் எச்.வினோத் இயக்கி வரும் படம் “வலிமை” தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது. கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் தல அஜித் நடிப்பில் நேர் கொண்ட பார்வை படங்களின் வாயிலாக நல்ல இயக்குனர் என சான்றிதழுடன் சுற்றி வருகிறார் எச்.வினோத்.

தல அஜித் குமாரின் வழக்கமான பாணியில் ஒரே இயக்குனருக்கு சில படங்கள் என சிவாவுக்கு பிறகு இணைந்துள்ளார் வினோத். இந்த இரு படங்களின் போஸ்டர்கள் வெளியானதையே இணையத்தில் கொண்டாடி வந்த ரசிகர்களுக்கு இப்போது அடுத்த ஒரு பிரமிப்பும் கிடைத்துள்ளது.

jilla-veeram

jilla-veeram

இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகலாம் என கோடம்பாக்கம் வட்டாரங்களில் ஒரு பேச்சு எழுந்துள்ளது. போக்கிரி-ஆழ்வார், வீரம்-ஜில்லா தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரே நாளில் வெளியாகும் பட்டியலில் பீஸ்ட்-வலிமை இணைகிறதா என்பதை ரிலீஸ் தேதி வெளியிட்ட பறகே அறியவரும்.

Continue Reading
To Top