தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் கியூப்க்கு எதிராக கடந்த மார்ச் 1 தேதி முதல் போராட்டத்தை நடத்தி வருகிறது, அதனால் நாளை முதல் படபிடிப்புகள் ரத்து எனவும், மேலும் எந்த நாளிதழ்களிலும் சினிமா விளம்பரம், போஸ்டர் கூட ஓட்டபடாது என தயாரிப்பாளர்சங்கத்தில் இருந்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் நேற்று தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தமிழ் நாடு மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் ஓரிரு தினங்களுக்கு முன் ஒரு கூட்டம் போட்டார்கள் அன்று நடைபெற்ற கூட்டத்தில் 147 தியேட்டர் உரிமையாளர்கள் கலந்துகொண்டார்கள் அந்த கூட்டத்தில் அனைவரும் ஓன்று கூடி மார்ச் 16 முதல் தியேட்டர்கள் மூடபடமாட்டோம் அதேபோல் ஸ்ட்ரைக்கில் பங்கேற்கவும் மாட்டோம் என அறிவித்தார்கள்.

இனி தமிழ் ,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி,இங்கிலீஷ்,மலையாளம் என எந்த படமாக இருந்தாலும் இனி மக்களின் பொழுதுபோக்கிற்காக திரையிடுவோம் என அவர்கள் உறுதியளித்துள்ளார் அபிராமி ராமநாதன் அந்த பொது குழு கூட்டத்தில். இவர் சென்னை தியேட்டர் உரிமையாளர் ஆவார்.