fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

முருகதாசுக்கு ஏழரை சனி உச்சத்தில் இருக்கும் போல.. நேரடியாகவே வம்புக்கு இழுத்த பிரபலம்

murugadoss

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முருகதாசுக்கு ஏழரை சனி உச்சத்தில் இருக்கும் போல.. நேரடியாகவே வம்புக்கு இழுத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுபவர் ஏ ஆர் முருகதாஸ். சமீப காலமாய் வெளியாகும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றால் ஒரு காலத்தில் முத்திரை குத்தும் விதமாகத்தான் இவரது படங்கள் இருந்தது.

ஏ ஆர் முருகதாஸின் மீது வரும் தவறாகக் கருதுபவர்கள், முதலில் முருகதாஸ் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பார், அதன் பிறகுதான் ஹீரோவை தேர்வு செய்வார். ஆனால் தற்போது ஹீரோவை தேர்வு செய்தபிறகு கதையை எழுதுவது தான் முருகதாசுக்கு இவ்வளவு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது எனவும் பேசி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் முருகதாஸின் மிக நீண்ட காலமாக இருக்கும் ஒரே ஒரு குற்றச்சாட்டு கதை திருடர் என்பது தான். சமீபத்தில் வந்த சர்கார் படம் கூட கதை பிரச்சனையில் சிக்கி வெகுவாக முருகதாஸ் டேமேஜ் செய்தது. முருகதாஸ் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து படங்களை இயக்குவதில் ஆர்வமாக இருந்தார்.

இருந்தாலும் முருகதாசின் பழைய டச் மிஸ்ஸிங் என்கிறது கோலிவுட் வட்டாரம். முருகதாஸ் முதன்முதலில் ஹிந்தியில் பிரபலம் அடைய காரணம் கஜினி படத்தை ரீமேக் செய்ததுதான். தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் பாலிவுட்டிலும் சக்கைபோடு போட்டது. இதனால் அங்கேயும் முருகதாசுக்கு ஒரு நல்ல பெயர் உண்டு.

ஆனால் பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் என்பவரின் கதையை திருடி தான் முருகதாஸ் கஜினி படத்தை எடுத்தார் என அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது. இது சம்பந்தமாக பலமுறை முருகதாஸசை வம்புக்கு இழுத்துள்ளார் கிறிஸ்டோபர் நோலன்.

இருந்தாலும் சமீப காலமாக முருகதாஸ் பெயர் டேமேஜ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் கஜினி படத்தை பற்றி பேசி முருகதாசை அசிங்கப்படுத்தி உள்ளார். இதனால் வருத்தத்தில் இருக்கும் முருகதாஸ் எப்படியாவது தளபதி 65 படத்தை வெற்றிப் படமாக மாற்றி விட வேண்டுமென குறிக்கோளாக உள்ளாராம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top