Connect with us
boomerang-movie

போலீசாரிடம் சிக்குவதையே பொழுதுபோக்காக வைத்திருக்கும் நடிகர் ஜெய்

jai chennai 28

News | செய்திகள்

போலீசாரிடம் சிக்குவதையே பொழுதுபோக்காக வைத்திருக்கும் நடிகர் ஜெய்

போலீசாரிடம் சிக்குவதையே பொழுதுபோக்காக வைத்திருக்கும் நடிகர் ஜெய்

அதிக சப்தம் கொண்ட ஒலிபெருக்கியுடன் காரை இயக்கிய நடிகர் ஜெயை பிடித்த காவல்துறை, அவரை வைத்தே விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு அனைவரிடமும் அப்ளாஸை பெற்று இருக்கிறது.

நடிகர் ஜெய் தளபதியின் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் அவரின் தம்பியாக கோலிவுட்டில் அறிமுகமானார். ஏறத்தாழ விஜயின் முக சாடையை கொண்டு இருந்ததால், அவருக்கு தமிழ் சினிமா நல்ல வரவேற்பை கொடுத்தது. இதை தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 600028 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றார். அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து, ஜெயிற்கும் தமிழ் சினிமாவில் நாயகனாக பல வாய்ப்புகள் அமைந்தன. அவரின் நடிப்பில் ராஜா ராணி, வாமனன், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. பெரும்பாலும் பார்க்க அப்பாவி லுக் கொடுக்கும் ஜெய், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்.

2016ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி அதிகாலையில் குடி போதையில் தனது ஆடி காரை ஓட்டிச்சென்றார். அப்போது அடையாறு பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் ஜெய் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார். இதை தொடர்ந்து, அவரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு மீதான விசாரணையில் ஜெய் குடித்து இருந்தது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்தும், 5200 ரூபாய் அபராதத்தையும் சைதாப்பேட்டை நீதிமன்றம் விதித்தது.

இந்நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சையில் நடிகர் ஜெய் சிக்கி இருக்கிறார். சென்னை பெரிய மேடு பகுதியில் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட அதிக சப்தம் கொண்ட ஒலிப்பெருக்கியுடன் தனது காரை ஓட்டிச்சென்று இருக்கிறார். இதை பார்த்த ரோந்து காவல்துறை, காரை வழி மறித்தது. அப்போது தான் காரை ஓட்டி வந்தது நடிகர் எனத் தெரிந்தது. இப்பிரச்சனையை நீதிமன்றம் வரை கொண்டு செல்லாமல் ஒரு புது ஐடியாவை பிடித்தனர் காவலர்கள். அது என்னவென்றால் நடிகர் ஜெய்யை எச்சரித்தவர்கள் விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிட அறிவுறுத்தினர். அதன் பொருட்டு அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாக மாறி இருக்கிறது.

நடிகர் ஜெய் அட்வைஸ் வீடியோ!

"சவுண்டு குறைச்சுக்கங்க பாஸ்… லைஃபுக்கு நல்லது!" நடிகர் ஜெய்யின் போலீஸ் வைரல் வீடியோ

Posted by Junior Vikatan on Wednesday, June 27, 2018

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top