பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சியை தொட்டவர் ஓவியா, சில காரணங்களால் நிகழ்ச்சியில் இருந்து தானாக விலகி கொண்டார், இவர் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் வர மாட்டாரா? என்ற ஏக்கம் இன்று ரசிகர்களிடையே உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியால் இவரை ட்விட்டரில் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை ஒரு சில நாட்களிலேயே அதிகரித்து கொண்டு இருந்தது. இவரது பெயரில் பலபேர் fake id வச்சி பல ஓவியா ஆர்மீஸ் வந்தார்கள் என்பது தனி கதை.

ஆனால் இவர் இறுதியாக ட்விட்டரில் ஜூன் 22-ல் வந்து சென்றிருந்தார், நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தற்போது ட்விட்டருக்கு வந்துள்ளார். அவர் ட்விட்டர்லையே நேத்துதான் நிறைய லைக்ஸ்,ரீ ட்வீட் வந்துள்ளது.

ட்விட்டரில் வந்துள்ள இவர் முதல் முதலாக அனைவருக்கும் நன்றி, ரொம்ப சந்தோசமா உள்ளது என பதிவிட்டுள்ளார், ரசிகர்களும் இவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.