Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ் ஹிட் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய்சேதுபதி.!
கடந்த ஒன்றரை மாதமாக சினிமாவில் ஸ்ட்ரைக் நடைபெற்று வந்தது அதனால் புதுப்படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை அதேபோல் படபிடிப்பும் எதுவும் நடைபெறவில்லை, சமீபத்தில் தான் சினிமா ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது.
சினிமா ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்ததும் பல பிரபலங்கள் அடுத்தடுத்து புதிய படத்தில் கமிட் ஆக ஆரம்பித்தார்கள், அந்த வகையில் நடிகர் விஜய்சேதுபதியின் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது, K புரொடக்ஷன்ஸ் மற்றும் YSR பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் தான் விஜய் சேதுபதி நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.
படத்தை சேதுபதி புகழ் அருண் குமார் தான் இயக்க இருக்கிறார் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க இருக்கிறார் படத்திற்கு யுவன் இசையமைக்கிறார், ஸ்ரீகற் பிரசாத் எடிட்டராக பணியாற்ற இருக்கிறார். படத்தின் ஷூட்டிங் வருகிற ஏப்ரல் 21 ம் தேதி தொடங்குகிறார்கள் படபிடிப்பு தளமாக சென்னை மற்றும் மலேசியா போன்ற இடங்களில் படமாக்க திட்டம் போட்டுள்ளார்கள். படத்தை பற்றி அதிகாரபூர்வ தகவலை அஞ்சலி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
