தமிழ் ரசிகர்கள் அந்த அந்த காலகட்டத்திற்கேற்ப தங்களது கனவுக்கன்னிகளை கவனமாக தேர்வு செய்வார்கள் அப்படி தற்போது அனைவருக்கும் பிடித்த கனவுக்கன்னியாக நயன்தாரா உள்ளார். ஆனால் செய்தி அவரை பற்றியதல்ல.

வெகு சில படங்கள் மட்டுமே தமிழில் நடித்தாலும் அனைத்து தமிழ் ரசிகர்கள் உள்ளத்தையும் கவர்ந்தவர் நஸ்ரியா. நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் ராஜா ராணி படத்தின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அதிகம் படித்தவை:  2017 சென்னையில் டாப் வசூல் செய்த பாலிவுட் படங்கள் தெரியுமா?

அதன் பின் வெளிவந்த நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற படங்கள் தோல்வியடைந்த போதிலும் ரசிகர்கள் மத்தியில் இவரது மார்கெட் சரியவில்லை. இருப்பினும் பகத் பாஸிலை திருமணம் செய்த இவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டார்.

ஆனால் தற்போது துல்கர் சல்மானுடன் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகவிருக்கும் ஒரு பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கவிருக்கிறார் நஸ்ரியா. ரசிகர்கள் மீண்டும் நஸ்ரியாவை ஏற்பார்களா என்று பொறுத்திருந்து பாப்போம்.

அதிகம் படித்தவை:  சினிமாவை விட்டு விலகுவேன்! கமல்ஹாசன் பகிரங்க அறிவிப்பு

Nazriya_cinemapettaiஇதேபோல் நஸ்ரியாவின் கணவர் பகத் பாசிலும் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: கல்யாணமான பொண்ணை கனவுக்‘கன்னி’னு எப்படிடா ஏத்துக்குறது?