விஷால் மீண்டும் நட்சத்திர கிரிகெட் போட்டியை அறிவித்து விட்டார். தமிழர்கள் எல்லாவற்றையும் சீக்கிரமாக மறந்து விடுவார்கள்.என்பது விஷாலின் கருத்து. அரசியல்வாதிகளும் நம்மை அப்படி தான் எடை போட்டு உள்ளனர்.

ஏப்ரல் 17ல் சென்னையில் நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர போட்டி அறிவிப்பு. மக்களிடம் பணம் வாங்க வேணாம் என்பதை புரிந்து கொண்ட நடிகர் அஜித் மக்களிடம் பணம் பறிக்காதீங்க சகநடிகர்களிடம் பணம் கேட்டு நடிகர் சங்க கடனை அடையுங்கள் கட்டிடம் கட்டுங்கள்.

மீண்டும் மீண்டும் தமிழ் மாணவர்களின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாணவர்களை அழைக்கின்றீர்கள்.

தினமும் தன் குடும்ப செலவுக்காக சம்பாதிக்கும் மக்களிடம் பணம் பறிப்பது முட்டாள் தனம் என்று தான் நடிகர் சங்கம் நடத்தும் கிரிக்கட் போட்டியை புறக்கணிக்கின்றார்.

ஒரு நடிகரே நமக்காக நடிகர் சங்கத்தை புறக்கணிக்க மக்களாகிய நாம் ஏன் அந்த கொள்ளையை புறக்கணிக்க கூடாது. ஆம். யாரும் நேரில் சென்று அந்த கிரிக்கெட் போட்டியை காண வேண்டுமா? நடிகர்களிடம் இல்லாத பணமா நம்மிடம் இருக்கின்றது.

சென்னை கடலூர் வெள்ளத்தில் மூழ்கிய போது இந்த நடிகர் சங்கம் என்ன செய்தது ?மாணவர்கள்  போராட்டத்தின் போது இந்த நடிகர் சங்கம் என்ன செய்தது.

சிந்தியுங்கள் இந்த கருத்து பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள் .. தமிழ் நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 50 கோடி வரை.

சராசரியாக 10 கோடி என்று வைத்துக்கொள்வோம். மாதம்  70ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு IT ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 250 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.  25 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசுஊழியர் 10 கோடி சம்பாதிக்க 333 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி 10 கோடி சம்பாதிக்க 760 வருடம் உழைக்க வேண்டும்.ஒரு நாளைக்கு 300 ரூபாய் வருமானம் பெறும் கூலி தொழிலாளி 10 கோடி சம்பாதிக்க 1000 ஆண்டுகள் உழைக்க வேண்டும்.

திரைப்பட நடிகர் நடிகைகள் பயன்படுத்தும கார்களின் விலை 50 லட்சத்திலிருந்து 5 கோடி வரை.படப்பிடிப்புதளங்களில் இவர்களது சொகுசு வாழ்க்கை என்பது நமது கேளிக்கைகடவுள் இந்திரன் கூட அனுபவிக்காதது.

வெளிநாட்டு மது, நட்சத்திர ஹோட்டல்உணவு, இரவு நேர கேளிக்கை, ஒப்பனைக்கு இருவர், உடை அணிவிக்க இருவர், குடைபிடிக்க ஒருவர், கொஞ்சம் வியர்த்தால் கேரவேனில் ஓய்வு.

இவர்கள் ஒரு நேரம் நட்சத்திர ஓட்டலில் உணவு உண்ணும் தொகை நம் விவசாயிகளின் ஒரு மாத உணவுச்செலவு.

ஒரு ஆண்டில் 3 படங்களில் நடித்து 50 கோடி ரூபாய் சம்பாதித்து 10 கோடி வரிஏய்ப்பு செய்து 5000 ரூபாய்க்கு ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள்வாங்கி கொடுத்து விளம்பரம் தேடுபவர்கள்.

பல முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பல கோடிகளில் கட்டிடங்கள்கட்டுவது இவர்களிடம் விற்பதற்காக தான்.

நாம் திரைப்படம் பார்க்க செலுத்தும் பணம் தான் இவர்களுக்கு சம்பளமாக செல்கிறது.

மேற்கூறிய இந்த ஏழைகளின் நடிகர்சங்கம் 22 கோடி ரூபாய் கடனில் தவிக்கிறதாம்.

அதை அடைக்க இவர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி ஒரு டிக்கெட் 1000 ரூபாய்க்கு நம்மிடம் விற்று கடனை அடைக்க போகிறார்களாம்.

புயல் வெள்ளத்தில்நம் மக்கள் அனைத்தையும் இழந்து நிர்வாணமாய் நின்றபோது நடிகர் சங்கம் உதவி செய்யாது என்று வெளிப்படையாக சொன்ன இவர்கள் தற்போது நம்மிடம் கிரிக்கெட் மூலமாக வசூல் என்ற வருகிறார்கள்.

ஆகையால் மானமுள்ள நம் மக்கள் இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியை பற்றி சிந்திக்க வேண்டும்.

இந்த செய்தியை முடிந்த வரை அனைத்து குழுக்களுக்கும் பகிரவும். அரசியல்வாதிகளிடம் ஏமாறுகிறோம்.. இவர்களிடமுமா?