fbpx
Connect with us

பிரதமர் மோடி எப்பொழுது பதவியேற்கிறார் தெரியுமா? இன்னும் பல வியூகங்களை கையாள போகும் பா.ஜ.க

modi

Politics | அரசியல்

பிரதமர் மோடி எப்பொழுது பதவியேற்கிறார் தெரியுமா? இன்னும் பல வியூகங்களை கையாள போகும் பா.ஜ.க

மக்களவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி அவர்கள் வரும் 30ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.

இந்த தேர்தலில் பாஜக  350 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியைத்  தக்க வைத்துக் கொண்டது.இதில் பிரதமர் நரேந்திர மோடி  3 லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இரண்டாவது முறையாக நரேந்திர மோடி அவர்கள் வரும் 30ம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை பாஜக தொண்டர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். வரும் 20ஆம் தேதி காசி செல்லும் மோடி அவர்கள் முப்பதாம் தேதி ஆட்சியில் அமர்கிறார்.

சில மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத காங்கிரஸ் முழுமையாக வாஷ் அவுட் செய்யப்பட்டுள்ளது பாஜகவின் திறமையான சூழ்ச்சியால்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து உலக அளவில் உள்ள தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.  முக்கியமாக பாகிஸ்தான், அமெரிக்கா, இஸ்ரேல் வாழ்த்தி வருகின்றனர்.

இந்தக் கூட்டணி கட்சிகளின் வெற்றியால் தமிழ்நாட்டில் ஒரு சில கட்சிகள்  வாஷ் அவுட் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சீமான் மற்றும் கமலஹாசனின் கட்சிகள் மூன்றாவது பழம் பெரும் கட்சியாக  உருவெடுத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top