பிரபுசாலமன் இயக்கும் ரயில் படத்தில் நடித்து முடித்து விட்ட தனுஷ், தற்போது அண்ணன்-தம்பி என இரண்டு வேடங்களில் கொடி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தை முடித்ததும் வெற்றிமாறனின் வடசென்னையில் நடிக்கிறார். அதோடு தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார் தனுஷ். ஆர்யா-அனுஷ்காவை வைத்து செல்வராகவன் இயக்கிய இரண்டாம் உலகம் படத்தை தயாரித்த பிவிபி நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்கிறதாம்.

அதிகம் படித்தவை:  அனிருத்தின் அட்டகாசமான பேட்ட படத்தின் மேக்கிங் வீடியோ.. மரண மாஸ் செம குத்தாட்டம்!

மேலும், தனுஷ் நடித்த தங்கமகன் படத்திற்கு அனிருத் இசையமைத்தார். அதன்பிறகு தனுஷ் நடித்துள்ள ரயில் படத்திற்கு டி.இமான் இசையமைக்க, கொடி, வடசென்னை படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதனால் தனுஷ் படங்களில் இருந்து அனிருத் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அடுத்தபடியாக செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இப்போது உறுதியாகியிருக்கிறது.