Tamil Cinema News | சினிமா செய்திகள்
14 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகையுடன் மீண்டும் இரண்டு படங்களில் இணையும் சிம்பு.!

நடிகர் சிம்பு தற்பொழுது செக்க சிவந்த வானம் படத்தில் நடித்துமுடித்துள்ளார் இதை தொடர்ந்து இவர் வெங்கட் பிரபு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், இந்த நிலையில் சிம்பு ஜோதிகாவுடன் மன்மதன், சரவணா என இரண்டு படத்தில் ஜோடியாக நடித்தார், தன்னை விட நான்கு வயது அதிகமாக இருந்த ஜோதிகாவுடன் ஜோடி போட்டு நடித்த இரண்டு படமும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் சிம்பு 14 வருடத்திற்கு பிறகு மணிரத்தினம் படத்தில் ஜோதிகாவுடன் சேர்ந்து நடித்துள்ளார் செக்க சிவந்த வானம் படத்தில், இந்த திரைபடம் விரைவில் வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் திரைப்படம் காற்றின் மொழி, இந்த படம் பாலிவுட்டில் வித்யாபலான் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆனது துமாரி சூலு என்ற படத்தின் தமிழ் ரீமேக் இந்த படத்தின் படபிடிப்பு கடத்த சில வாரத்தில் தான் தொடங்கியது, இந்த படத்தில் நடிகர் சிம்பு கௌரவ வேடத்தில் நடிக்கிறார் அவர் சம்மந்த பட்ட காட்சிகள் நேற்று எடுக்க பட்டது. 14 வருடத்திற்கு மீண்டும் இரண்டு படத்தில் இணைந்துள்ளது இரு தரப்பு ரசிகர்களிடம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
