Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டு டிடிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்..
பெரிய இடைவேளைக்கு பிறகு சின்னத்திரைக்கு திரும்பி இருக்கும் டிடி சென்னை டைம்ஸ் கருத்துக்கணிப்பில் சின்னத்திரையின் விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் முதலிடம் பெற்று இருக்கிறார். சின்னத்திரையின் மிக விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் டிடி முதலிடத்தை தட்டி சென்று இருக்கிறார். தொகுப்பாளினிகளிலே ஸ்டார் அந்தஸ்து பெற்று ரசிகர்களை எக்கசக்கமாக சேர்த்து இருப்பவர். இப்பட்டியலில் டாப் இடத்தை பிடித்த டிடி பல நாள் கழித்து முதல்முறையாக மனம் திறந்து இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய திவ்யதர்ஷினி, இப்பட்டியலில் முதல் இடம் பிடித்ததில் செம சந்தோஷமாக இருக்கிறேன். நான் ரசிகர்களை கவர்ந்தேன் என தெரியும். ஆனால், இவ்வளவு பிடிக்கும் என சத்தியமாக தெரியாது. பெண்களுக்கு பொறுமை ரொம்ப அவசியம். அதுமட்டுமல்லாது, மரியாதை இருக்க வேண்டும். அதை நான் இன்றும் கடைபிடிப்பதால் தான் இந்த கௌரவம் தனக்கு கிடைத்து இருப்பதாக நினைக்கிறேன். அதிலும், என் ப்ளஸ் சிரிப்பு தான். எங்கு சென்றாலும் அதை கண்டிப்பாக கூடவே வைத்து இருப்பேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
தொடர்ந்து, பேசிய அவர், என் சினிமா வாழ்க்கையை 10 வயதில் தொடங்கினேன். ஆனால், விஜய் டிவியில் இல்லை சன் டிவியில் ஒரு சிறுவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அதை தொடர்ந்து, 9வது படிக்கும் போது விஜய் டிவி வாய்ப்பு கிடைத்தது. அன்றில் இருந்து இன்று வரை இங்கு தான் இருக்கிறேன். என் வேலை பாதுகாப்பான சூழலாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். இதையடுத்து, ஏன் படங்களில் நடிக்கவில்லை என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. நான் நடிக்க மாட்டேன் என யாரிடமும் கூறவில்லை.
யாரும் வாய்ப்பு தரமாட்றாங்க பாஸ். நான் நடிக்கவே மாட்டேன் என எங்கையும் சொல்லவில்லை. பா.பாண்டி படத்தில் தனுஷ் சார் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அப்போதே ஒரு சீன் தான். ஆனால் பவர்புல்லாக இருக்கும் எனக் கூறினார். அவரிடம் என்னை ஏன் தேர்வு செய்தீர்கள் என கேட்டேன். எனக்கு எல்லார் வீட்டிலும் அங்கமாக இருக்கும் ஒருவர் தான் வேண்டும் என்றார். தற்போது, கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம், ராஜீவ் மேனனின் சர்வம் தாள மயம் படத்தில் நடித்து வருகிறேன்.
ரசிகர்களுக்கு தெரியாத ரகசியம் உங்களிடம் இருக்கிறதா எனக் கேள்விக்கு, எனக்கு இன்று வரை சாலையை தனியாக கடக்க தெரியாது. எனக்கு சைக்கிள், இரு சக்கர வாகனம் ஓட்டவே தெரியாது. 13 வயதில் என் அப்பாவிற்கு குடிக்க மாட்டேன், சிகரெட் குடிக்க மாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்.
இன்று வரை அதை செய்து வருகிறேன். கிரிடிட் கார்ட் வைத்து கொள்ள கூடாது என்பதையே கொள்கையாக வைத்து இருக்கிறேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
