பைக் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி, கிளாசிக் மோட்டார் பைக் என்றாலே நம் நினைவிற்கு வருவது ராயல் என் பீல்ட், ஜாவா எஸ்டி, டவ்ரஸ் போன்ற பைக்குகள்தான்.

அதிலும் 80s ஹீரோக்களான கமல், ரஜினி, பிரபு போன்றோர் அனைவரும் திரைப்படத்தில் ஒட்டியது ஜாவா பைக்தான். கரடு முரடு பாதைகளில் ரவுடிகள் விரட்ட ஹீரோ இந்த பைக்கில்தான் தப்பித்து செல்வார். செக்கோஸ்லோவாகியாவிலிருந்து தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட இந்த பைக்குகள் அப்போதைய இளைஞர்களின் கனவுக்கன்னி என்றே சொல்லலாம். பவர்புல் இஞ்சின், வித்யாசமான புகைபோக்கி சத்தம் என்று அனைத்திலும் அலாதியானது இந்த பைக். இப்போதும் பெரு நகரங்களில் பலர் ஜாவா பைக்கை புத்தம் புதிதாக பேணி பாதுகாத்து வருகின்றனர்.

rajini java bikeசரி கதைக்கு வருவோம், மைசூரில் இருந்த ஜாவா ஆலையில் 1996ம் ஆண்டில் இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதன்பிறகு 21 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் இந்தியாவில் ஜாவா பைக்குகளின் விற்பனை விரைவில் வரும் என்று செய்தி வந்துள்ளது.

ஜாவா பிராண்டில் மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்து விற்பதற்கான உரிமத்தை மஹிந்திரா தனது அங்கமான கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின் மூலமாக வாங்கியுள்ளது. அதன்கீழ் மத்திய பிரதேச மாநிலம் பீதம்பூரில் ஜாவா தயாரிப்பு ஆலை நிறுவப்பட்டுள்ளது.

jawa-bikeஇதன் முதல் வெளியீடாக ஜாவா 350 OHC 4-Stroke மற்றும் ஜாவா 660 வின்டேஜ் பைக்குகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனம் வெளியீடு குறித்து எந்த தேதியையும் இதுவரை அதிகாரப்பூர்வமாய் அறிவிக்காத நிலையில் 2018ம் ஆண்டில் ஜாவா பைக்குகள் இந்திய சந்தைக்கு வர வாய்புள்ளதாய் செய்திகள் வந்துள்ளன.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: என்பீல்ட் நமிதானா ஜாவா நயன்தாராடா!!!