Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் வாங்கிய சம்பளத்தை அப்படியே போட்டு உடைத்த வருமானவரி துறை.. அலறவிட்ட தளபதி
தமிழ் சினிமாவை பொருத்தவரை தற்போது வியாபார ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் முதல் இடத்தில் இருப்பவர் தளபதி விஜய் என்பது சமீபத்தில் வந்த பிகில் படம் நிரூபித்தது. இதனை படத்தின் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து தளபதி ரசிகர்களை கொண்டாட வைத்தார்.
அதன் பிறகு தளபதி விஜய் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதிலும் விஜய் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருக்கும்போது அவசரஅவசரமாக கூட்டிவந்து விசாரணை நடத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அதுவரை பிகில் படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் வருமான வரித்துறையினர் பிகில் படம் 300 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டனர். இது விஜய்யை பிடிக்காதவர்களுக்கு சரியான ஆப்பாக அமைந்து.
அதனைத் தொடர்ந்து தற்போது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து விஜய் வெளிநாட்டிற்கு ஓய்வுக்கு சென்றுள்ளார். ஆனால் அந்த நேரம் பார்த்து தற்போது தளபதி விஜய்யின் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது தளபதி விஜய் பிகில் படத்திற்கு 50 கோடி சம்பளம் வாங்கியதாகவும் மாஸ்டர் படத்திற்கு 80 கோடி சம்பளம் வாங்கியதாகவும் அதிகாரப்பூர்வமாக வருமான வரித்துறையினர் அறிக்கை வெளியிட்டனர். மேலும் இந்த மொத்த வருமானத்துக்கும் விஜய் சரியாக வரி செலுத்தி விட்டதாகவும் கூறினர்.
இதனால் தற்போது விஜய் ரசிகர்கள் தலைகால் புரியாமல் கொண்டாடி வருகின்றனர். ஆனால் தளபதி விஜய்யை பிடிக்காதவர்களுக்கு இது மிகுந்த சோகத்தை கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
