dhanush

தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்க தயாராகி விட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது.

Dhanush
Dhanush

கோலிவுட்டின் ப்ரூஸ் லீ என செல்லமாக அழைக்கப்படுபவர் தனுஷ். அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான முதற் திரைப்படமான துள்ளுவதோ இளமையின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். ஆனால், இப்படம் தனுஷிற்கு பெரிய வரவேற்பு கொடுக்கவில்லை. இவரெல்லாம் நாயகனாக என எழுந்த விமர்சனங்களே அதிகம். இருந்தும் தைரியமாக அண்ணனுடன் இணைந்து காதல் கொண்டேன் படத்தில் மீண்டும் நடித்தார். படம் மிகப்பெரிய ஹிட், இப்படத்தில் தனுஷின் நடிப்பு இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. காதல் கொண்டேன் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்திற்கு 2011ம் ஆண்டின் சிறந்த நடிகர் என்ற தேசிய விருதை பெற்றார். இங்கு தொடங்கிய தனுஷின் கிரியர் கிராப் அவரை கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க வைத்தது.

அதிகம் படித்தவை:  வடிவேலுவால் அச்சத்தில் மொட்டை ராஜேந்திரன்

அனிருத் இசையில் இவர் எழுதி, பாடிய வொய் திஸ் கொலவெறி பாடலுக்கு உலக அளவில் ரீச் கிடைத்தது. அப்பாடலை தெரியாத ஆளே இல்லை என்ற நிலை உருவாகியது. தொடர்ந்து, பல பாடல்கள் பாடினார். சொந்தமாக வுண்டர்பார் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். இதன் மூலம் பல படங்களையும் தயாரித்து வருகிறார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் தயாரிப்பாளரும் தனுஷ் தான். முன்னதாக, பா. பாண்டி படத்தை இயக்கினார். ராஜ்கிரண், ரேவதி உள்ளிட்ட பழம்பெரும் ஜோடியை வைத்து வெளியாகிய இப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராகவும் தனுஷ் அறியப்பட்டார். தற்போது, பல படங்களில் பிஸியாக நடித்தும் வருகிறார்.

அதிகம் படித்தவை:  மீண்டும் களவாணி மகேஷ் கேரக்டரில் ஓவியா.. மகிழ்ச்சியில் ஓவியா ஆர்மியினர்
dhanush vip2

இந்நிலையில், தனுஷ் தனது இயக்கத்தில் அடுத்த படத்தின் கதையை உருவாக்கிவிட்டதாக பேச்சுக்கள் அடிப்பட தொடங்கி இருக்கிறது. படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். அவருடன் ஒரு முன்னணி நடிகர் கூட்டணி வைக்க இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட இருப்பதாகவும், மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கிறது தனுஷ் பட்டாளம்!