ஏழு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி எதிர்பாரா பெருவெற்றி பெற்ற நகைச்சுவை திரைப்படம் களவாணி.இந்தப் படத்தில் விமல், ஓவியா, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சூரி போன்றோர் நடித்திருந்தனர். இயல்பான நகைச்சுவையும், எளிமையான இசையும், வெகு ஜனத்தை கவரும் வகையில் இயக்கமும் அமையப்பெற்றதனால் இந்த படம் எதிர்பாரா வெற்றி அடைந்தது. படத்தை சற்குணம் அவர்கள் இயக்கி இருந்தார்.

தற்போது இதே கூட்டணியில் களவாணிபடத்தின் இரண்டாம் பாகம் எடுக்கபோவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதில் ஓவியா நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவரது கால்ஷீட் கிடைத்தால் கட்டாயம் அவர்தான் ஹீரோயினாக இருப்பார் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தற்போது சற்குணம் அவர்கள் நடிகர் மாதவனை வைத்து ஒரு படம் இயக்கிக்கொண்டிருக்கிறார். அதே போல் நடிகர் விமல் மன்னன் வகைரா என்னும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இருவரும் அவரவர் படங்களை முடித்த பிறகே களவாணி இரண்டாம் பாகம் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர்.

இயக்குனர் சற்குணம் மிகக் குறுகிய கால அளவில் படப்பிடிப்பை முழுவதும் முடிக்கக் கூடியவர். எனவே களவாணி இரண்டாம் பாகமும் விரைவில் படமாக்கப்பட்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: மீண்டும் அறிக்கி LC112 கூட்டு!!!