Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் எப்படி பெரிய ஆள் ஆவான்? தளபதியை கேவலமாக விமர்சித்த பிக் பாஸ் பிரபலம்
தளபதி விஜய்யை தேவையில்லாமல் தவறாக பேசி தொடர்ந்து வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் பிரபலம் ஒருவர் சமீபத்தில் எல்லை மீறி பேசியது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இன்றைக்கு அதிக வியாபாரம் உள்ள தமிழ் நடிகர் விஜய்தான் என்று அடித்துச் சொல்லலாம்.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் மாஸ்டர் படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்தியா முழுவதும் ஒரு பெரிய படம் சோலோ ரிலீஸாவது இதுதான் முதல் முறை.
இப்படி உச்சத்திலிருக்கும் தளபதி விஜய்யை அவன் இவன் என்று கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் பேசி பிரச்சனையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் மீரா மிதுன். மேலும் விஜய்யின் ரசிகர் மன்ற தலைவர் என்ற பெயரில் மீராமிதுனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இப்படியெல்லாம் செய்தால் விஜய் எப்படி பெரிய ஆள் ஆவான் என அவர் கூறியது விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் மற்ற ரசிகர்களையும் கோபப்படுத்தியுள்ளது. மேலும் சூர்யா, விஜய் ஒன்னும் அவ்வளவு பெரிய ஆள் கிடையாது என மீண்டும் இருவரையும் வம்பிழுத்துள்ளார்.
இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் தற்போது கடும் கோபத்தில் இருக்கின்றனர். மீரா மிதுன் நாளுக்கு நாள் விஜய் மற்றும் சூர்யா இருவரையும் தாக்கிப் பேசிய பிரபலம் அடையலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் போல.
முழு வீடியோ பார்க்க: Click Here
