fbpx
Connect with us

Cinemapettai

தளபதியின் அடுத்த படத்தை இயக்கப்போவது நான்தான்.. நாசுக்காக அறிவித்த அட்லீ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதியின் அடுத்த படத்தை இயக்கப்போவது நான்தான்.. நாசுக்காக அறிவித்த அட்லீ

அட்லி சமீபத்தில் விஜய்யை வைத்து பிகில் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தளபதி 65 படத்தை இயக்குவது யார் என்று ரசிகர்கள் பல இயக்குனர்களின் பெயர்களை பரிசீலனை செய்து வந்த நிலையில், திடீரென அட்லீ வெளியிட்ட புகைப்படம் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

அட்லி ராஜாராணி என்ற வெற்றிப் படத்தின் மூலம் தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்து தொடர்ச்சியாக தெறி, மெர்சல், பிகில் என மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்தார்.

தற்போது பிகில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு அதில் தளபதி 65 படத்தை நான் தான் இயக்கப் போகிறேன் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார். புகைப்படத்தில் அட்லி என்பதன் முதல் எழுத்து A, பிகில் ஜெஸ்ஸி நம்பர் 5 என்பதையும் சுட்டிக் காட்டி A5 எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ராயப்பனின் வாழ்க்கை வரலாறுதான் என தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் படத்தை அட்லி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top