Connect with us

Cinemapettai

மீண்டும் வில்லனாகிறார் முன்னாள் ஹீரோ

comedy-hero

Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் வில்லனாகிறார் முன்னாள் ஹீரோ

தன்னோட முதல் படத்திலேயே சிறந்த புதுமுகத்திற்கான விருதை பெற்றவர், நான்கு Film Fare விருதுகள், நான்கு தமிழ்நாடு மாநில விருதுகள், நந்தி விருது, கலைமாமணி விருது இப்படி விருதுகளா வாங்கி குவித்தவர், 80’s ல் தற்போதைய சூர்யா போல் இளைஞிகள் இதயத்தை கொள்ளை அடித்தவர், அன்றும் இன்றும் என்றும் இளமை குறையா நம்ம கார்த்திக் பற்றிய செய்திதாங்க இப்போ பார்க்க போறோம்.

துருதுருவென எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் இவர் எங்கு சென்றாலும் சுற்றி இருக்குற எல்லாரையும் சிரிக்க வைச்சுருவாரு. அப்படிபட்ட இவர் வில்லனா நடிச்சா எப்படி இருக்கும்?

அனேகன் படம் தோல்வி அடைந்திருந்தாலும் அதுல இவரோட வில்லன் கதாபாத்திரத்தையும், இவர் பேசுகிற ஆங்கில ஸ்டைலையும், கிண்டல் பேச்சையும் அவ்வளவு சீக்கிரமா யாராலும் மறக்க முடியாது.

அப்படிப்பட்ட இவரோட வில்லன் நடிப்பை ஒரு இயக்குனர் ரொம்பவே ரசிச்சு பார்த்திருக்காருங்க. ரசித்தது மட்டுமில்லாம இப்போ தான் எடுத்துக்கொண்டிருக்கும் புதிய படத்துலயும் கார்த்திக்கை வில்லனாக நடிக்கவைச்சிருக்காரு.

Nayantara’s-vignesh shivanஅந்த இயக்குனர் வேற யாருமில்லைங்க நம்ம விக்னேஷ் சிவன்தான். அவர் இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிகர் கார்த்திக்கை வில்லனாக திரும்பவும் களமிறக்கிருக்காரு.

இதுக்கு முன்னாடி விக்னேஷ் சிவன் இயக்கத்துல வெளிவந்த நானும் ரவுடிதான் படத்தில் நடிகர் பார்த்திபன் வில்லனா நடிச்சது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top