Connect with us
Cinemapettai

Cinemapettai

anirudh-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் காதலில் விழுந்த அனிருத்.. இந்த முறையும் ஒரு பாடகியை தான் காதலிக்கிறாராமே!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார்.

அவரது இசையமைப்பில் அடுத்தடுத்து மாஸ்டர் மற்றும் டாக்டர் போன்ற படங்கள் வெளியாக உள்ளன. இன்று தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார் அனிருத்.

இது ஒருபுறமிருக்க சில வருடங்களுக்கு முன்பே அனிருத் காதல் சர்ச்சைகளில் சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை ஆண்ட்ரியாவை காதலிப்பதாக அப்போதே தகவல்கள் வெளியாகின.

அது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் சுசிலீக்ஸ் புகைப்படங்களில் இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி பயங்கர சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

anirudh-andrea

anirudh-andrea

அதுவும் மார்பிங் செய்யப்பட்டதா என்பது தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் இரண்டாவது முறையாக அனிருத் இன்னொரு படகின் மீது காதலில் விழுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் டாக்டர் படத்திலிருந்து செல்லம்மா என்ற பாடல் வெளியானது. அந்த பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இருவரும் இணைந்து பாடி இருந்தனர்.

அந்த வீடியோ இணையதளங்களில் செம வைரல் ஆனது. அந்த வீடியோவில் இடம் பெற்ற அந்த பாடகியை தான் தற்போது காதல் செய்து கொண்டிருக்கிறாராம் அனிருத்.

இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் தெரிவித்தனர். ஆனால் இதில் எந்த அளவு உண்மை என்பது இருவருக்கும் திருமணம் நடந்தால் தான் தெரியும்.

Continue Reading
To Top