Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் ரிஸ்க் எடுக்கும் அஜித்.. ஆச்சரியத்தில் தல படை
விஸ்வாசம் படத்தின் சண்டை காட்சிக்காக நடிகர் அஜித் டூப் போடாமல் நடிக்க வைக்க சண்டை இயக்குனர் திலீப் சுப்பராயன் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
இயக்குனர் சிவாவின் விவேகம் படத்தை தொடர்ந்து, அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம். இதற்கு முன்னரே, வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து இருவரின் கூட்டணியில் படங்கள் வெளியாகி இருக்கிறது. நான்காவது முறையாக இக்கூட்டணி அறிவிக்கப்பட்டதும், ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தில் அஜித்தின் நாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். முதன்முறையாக அஜித்தின் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தில் யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
கடந்த மாத முதல் வாரத்தில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது. விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை படக்குழு தொடங்க இருக்கிறது. அடுத்து மும்பை மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்கும் அஜித்துக்கு சாக்ஷி அகர்வால் மற்றொரு நாயகியாக நடிக்க இருப்பதாக தெரிகிறது.
அஜித்துக்கு சமீபத்திய எல்லா படங்களுக்குமே சண்டை காட்சிகளை இயக்கியது சில்வா தான். ஆனால், விவேகம் படத்தில் அவர் மீது அஜித்துக்கு அதிருப்தி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதை தொடர்ந்து, விஸ்வாசம் படத்தில் சண்டை இயக்குனராக திலீப் சுப்பராயன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இப்படத்தின் சண்டை காட்சிகளை டூப் போடாமல், அஜித்தையே ஒரிஜினலாக நடிக்க வைக்க திலீப் திட்டமிட்டு இருக்கிறார். இவர் இதற்கு முன்னர் அஜித்தின் மங்காத்தா படத்தில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. உடம்பில் பல அறுவை சிகிச்சைகளை செய்தால் கூட, அஜித் டூப் போடாமல் நடிப்பதை விரும்புவார் என்பதால் விஸ்வாசம் படத்தின் சண்டை காட்சிகள் இந்த வருட சூப்பர் ஹிட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
