Videos | வீடியோக்கள்
ஐயய்யோ உயிர் என்றுமே உங்களுடையது தேவி.. உருக வைத்த ‘அக நக’ பாடல் வரிகள்!
பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாவத்தில் இடம்பெற்ற அகநக பாடல் வெளியாகி உள்ளது.
மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வரவேற்பு பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, விக்ரம் பிரபு மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இவ்வாறு ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் கதையை அற்புதமாகக் கொண்டு சென்றிருந்தார் மணிரத்தினம். பொன்னியின் செல்வன் 2 வெளியாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் தற்போதே படத்திற்கான பிரமோஷன் தொடங்கிவிட்டது.
Also Read : பக்கா மெலடி சாங்.. வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின் அக நக பாடல் க்ளிம்ப்ஸ்
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 வில் இடம் பெற்ற அகநக பாடலின் வரிகள் இப்போது வெளியாகியுள்ளது.
ஏ ஆர் ரகுமானின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாடி உள்ளார். மேலும் பாடல் வரிகளை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். திரிஷா மற்றும் கார்த்திக் இடையே ஆன இந்த மெல்லிசை பாடல் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.
Also Read : பொன்னியின் செல்வன் 2 ரிலீசுக்கு வரும் பெரும் சிக்கல்.. படாதபாடு படும் ஜெயம் ரவி, விக்ரம்
இந்த பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிக பார்வையாளர்களை சென்றுள்ளது. மேலும் இந்தப் பாடலில் இடம்பெற்ற காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸுக்காக நாவல் வாசகர்கள் மற்றும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
Also Read : அண்ணனும் கைவிட்டாச்சு, நம்பிய படமும் கோவிந்தா.. பொன்னியின் செல்வன் 2 தான் நம்ம அஸ்திவாரம்