fbpx
Connect with us

Cinemapettai

தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது விஜய் பட இயக்குனரா? கிடைக்கிற கேப்பில் எல்லாம் மாஸ் காட்டுறாருப்பா!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது விஜய் பட இயக்குனரா? கிடைக்கிற கேப்பில் எல்லாம் மாஸ் காட்டுறாருப்பா!

தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பாதி படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் எதிர்பாராத விதமாக மொத்த படப்பிடிப்புகளையும் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

அதுமட்டுமில்லாமல் வலிமை படத்தின் படப்பிடிப்பை அநேகமாக 2021 பிப்ரவரி மாதத்தில் தான் தொடங்க இருப்பதாக தெரிகிறது. இதனால் தல ரசிகர்கள் நொந்து போயுள்ளனர்.

ஏற்கனவே வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட விடாத நிலையில் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நேரத்தில் தல அஜித்தின் வலிமை படம் 2021 தீபாவளிக்கு தான் வெளிவருகிறது என்றால் அவர்களின் நிலைமை கொஞ்சம் கஷ்டம்தான்.

இந்த இடைப்பட்ட நாட்களில் தல அஜித் தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. முடிந்தவரை போன் கால் மூலமாக கதை கேட்டு வருகிறாராம்.

தல அஜித்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா தான் இயக்கப் போகிறார் என பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அதில் உண்மை இல்லையாம். தற்போது கிடைத்த கேப்பில் தல அஜித்துக்கு ஒரு கதையை சொல்லி ஓகே செய்து விட்டாராம் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

தல அஜித்திற்கு வெயிட்டான கதையை கூறியுள்ளாராம். முடிந்தவரை வலிமை படத்திற்கு பிறகு இந்த படத்தையே செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறாராம் தல.

ஏற்கனவே மாஸ்டர் படத்தை இயக்கிய விஜய் ரசிகர்களின் மனதை கவர்ந்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக தல ரசிகர்களின் அன்பில் நனையப்போகிறார் என்ற செய்தி அனைவரையும் குதூகலப்படுத்தியுள்ளது உள்ளது.

Continue Reading
To Top