ஒரு காலத்தில் ராசியில்லாத நடிகை என தமிழ் சினிமாவில் முத்திரை குத்தப்பட்டு அனுப்பப்பட்ட பூஜா ஹெக்டே தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக மாறியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக பூஜா ஹெக்டே நடிக்கும் தெலுங்கு படங்கள் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று வருகின்றனர். அந்தவகையில் கடைசியாக வெளியான அலவைகுண்டபுரம்லோ படம் வசூலை வாரி குவித்தது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிக்கும் தளபதி 65 பட வாய்ப்பை சுலபமாக பெற்றுவிட்டார். நீண்ட நாட்களாகவே தமிழில் முன்னணி நடிகருடன் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற பூஜா ஹெக்டேவின் கனவு நிறைவேறியது.
தெலுங்கை போலவே தற்போது தமிழிலும் பூஜா ஹெக்டேவின் மார்க்கெட் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் அடுத்ததாக சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணையும் பட வாய்ப்பை பெற்றுவிட்டாராம் பூஜா ஹெக்டே.
இப்போதைக்கு கதை மட்டும் சொல்லி ஓகே செய்து வைத்திருக்கும் சிறுத்தை சிவா படக்குழு, அண்ணாத்த படத்தை முடித்தவுடன் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சூர்யாவை வைத்து படம் இயக்க இருந்த சிறுத்தை சிவாவுக்கு சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த பட வாய்ப்பு கிடைத்ததால் சூர்யாவே பெருந்தன்மையுடன் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என சிவாவை அனுப்பி வைத்ததாக அப்போதைய பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.