Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யாவுடன் ஒரே படம்தான்.. சினிமாவே வேண்டாம் என ஓட்டம் பிடித்த நடிகை
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துக் கொண்டு வெற்றி நடைபோட்டு வருபவர் சூர்யா. சமீபகாலமாக தோல்வி படங்களை கொடுத்து வருவதால் சூர்யாவின் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருக்கின்றனர்.
சோகத்தை எல்லாம் தூக்கி அடிக்கும் விதமாக சூர்யாவின் அடுத்த சூரரைப்போற்று படம் ரெடியாகி உள்ளது. படம் தாறுமாறாக இருப்பதாக ஏற்கனவே விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
அமேசான் தளத்தில் முதல் முதலில் ஒரு வெற்றிப்படமாக சூரரைப்போற்று படம் அமையும் எனவும் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சூர்யாவுடன் 18 வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில் நடித்த நடிகை அதன்பிறகு சினிமாவே வேண்டாம் என ஓட்டம் பிடித்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் புஷ்பவாசகன் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவான படம் ஸ்ரீ. பாக்ஸ் ஆபீஸில் படு தோல்வியை சந்தித்தது. ஆனால் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
முதன் முதலாக 14 வயதில் நாயகியாக நடித்தவர் ஸ்ருதிகா. அந்த படத்தில் இவருக்கு 14 வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு இளமை ததும்ப ததும்ப இருந்த ஸ்ருதிகா அந்த படத்திற்கு பிறகு சினிமாவுக்கே முழுக்கு போட்டுவிட்டார்.
அந்த படத்தின் இயக்குனரிடம் நடிக்க தெரியாததால் அதிகம் திட்டு வாங்கிய ஸ்ருதிகா அதன்பிறகு சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி விட்டாராம். இதனை சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
