Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யாவை புரிஞ்சுக்கவே முடியல.. வெற்றிமாறனை ஒதுக்கிவிட்டு பிரபல குடும்ப இயக்குனருடன் அடுத்த படம்
சூரரைப் போற்று படம் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் தளத்தில் அந்த படம் வெளியாக உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
ஆனால் அதன் பிறகு சூர்யா யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி இன்னமும் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டுதானிருக்கிறது.
முதல் முதலில் சூர்யாவுடன் சூரரைப்போற்று படத்திற்கு பிறகு கைகோர்க்க இருந்தவர் சிறுத்தை சிவா தான். ஆனால் அதன் பிறகு ஹரி மாற்றப்பட்டார்.
தற்போது புதுமுக இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் நட்புக்காக நடித்துக்கொண்டிருந்த சூர்யா, அந்த படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை அதிகரிக்க சொல்லிவிட்டாராம்.
அதனைத் தொடர்ந்து வெற்றிமாறனுடன் கூட்டணி வைப்பதாகவும் தகவல் வெளியானது. பெரும்பாலும் சூர்யா, வெற்றிமாறன் படத்தில் தான் அடுத்து நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப் பட்டது.
ஆனால் அதில் டிவிஸ்ட் வைத்துள்ளார் சூர்யா. கடைக்குட்டி சிங்கம் வெற்றிக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த படத்தை தற்போது கையில் எடுத்துள்ளாராம்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வெற்றிமாறன் கூட்டணியை எதிர்பார்த்த சூர்யா ரசிகர்களுக்கு கொஞ்சம் சோகத்தை கொடுத்துள்ளது இந்த செய்தி.
