புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சல்மான் கானை அடுத்து, ஷாருக்கானுக்கு கொலைமிரட்டல்.. பாலிவுட்டில் அதிர்ச்சி

சல்மான் கானை அடுத்து, ஷாருக்கானுக்கும் மர்ம நபர்கள் கொலைமிரட்டல் விடுத்துள்ள நிலையில், அழைப்பு விடுத்தவர் மீது பாந்த்ரா போலீஸ் ஸ்டேசனில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் ஷாருக்கான். இவர் தற்போது கிங்-2 உள்ளிட்ட சினிமா படங்களில் கவனம் செலுத்தி வருவதுடன் கிரிக்கெட் உள்ளிட்ட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்து வருகிறார். இந்த நிலையில், ஷாருக்கானுக்கு கொலைமிரட்டல் எடுக்கப்பட்டதாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ரா காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அதன்படி, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரியில் இருந்து பைசான் என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து அந்த கொலைமிரட்டல் வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஷாருக்கான் சார்பில் பாந்த்ரா போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கானை கொன்றுவிடுவோம் என பகிரங்க மிரட்டல்

இந்த நிலையில், கொலைமிரட்டல் விடுக்கப்பட்ட எண் மூலம் அந்த நபரின் லோகேசனை கண்டறிந்துள்ளனர் போலீஸ். அந்த நபர் தன்னை ஒரு இந்துஸ்தானி எனக் கூறிக் கொண்டு, ரூ.50 லட்சம் பணம் பணம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஷாருக்கானை கொன்றுவிடுவோம் என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். இது பாலிவுட் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக மற்றொரு சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது. அதில், சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டுமானால் ரூ.5 கோடி பணம் கொடுக்க வேண்டும். அல்லது எங்கள் பிஷ்னோய் சமூகத்தினர் கோயிலுக்குச் சென்று மன்னிப்புக் கேட்ட வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் அவரை கொன்றுவிடுவோம் என தெரிவித்தனர். இதுதொடர்பாக ராஜஸ்தானின் ஜலோரைச் சேர்ந்த நபர் ஒருவரை கர்நாடகாவில் போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர்களுக்கு அடிக்கடி கொலைமிரட்டல் விடுக்கப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனால் இவ்விரு சூப்பர் ஸ்டார்கள் நடித்து வரும் படங்களில் முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்களுக்கு பாதுகாப்பு கூடுதலாக அளிப்பது, ஷூட்டிங்கில் பங்கேற்க முடியாமல் போவது. உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் படம் ரிலீஸ் தள்ளிப்போகும் சூழலும் ஏற்படுவதாக தகவல் வெளியாகிறது. இதனால் இப்படி கொலைமிரட்டல் விடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்களும், சினிமாத்துறையினரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News