fbpx
Connect with us

Cinemapettai

`கபாலி’ வரிசையில் அஜித்தின் `விவேகம்’

Kabali-Vivegam

News | செய்திகள்

`கபாலி’ வரிசையில் அஜித்தின் `விவேகம்’

கடந்த வருடம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்ற படம் `கபாலி’. பா.ரஞ்சித் இயக்கிய இப்படத்தில் ரஜினிகாந்த் மலேசியா டானாக வருவார். இப்படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, படத்தின் புரமொஷன் வேலைகளுக்காக மெனக்கிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். படத்தை பெரிய அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யும் நோக்கில் `கபாலி’ போஸ்டருடனான விமானம் உள்ளிட்ட பல்வேறு விதமான புரமொஷன் வேலைகளை மேற்கொண்டார்.

மேலும் சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனம் ஒன்று `கபாலி’ படத்தில் ரஜினி கோட்டுடன் நிற்கும்படியான பொம்மை ஒன்றை செய்து விற்பனை செய்தது. இவ்வாறு சுமார் 40,000 பொம்மைகள் விற்பனையானதாக அந்த நிறுவனம் சார்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.

Thala-Ajith-Vivegamஅதேபோல், `விவேகம்’ படத்தில் அஜித்தின் சிக்ஸ்பேக் பொம்மை தற்போது தயாராகி வருகிறது. முன்னதாக, இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அஜித் சிக்ஸ் பேக்குடன் கோபமாக நிற்கும் படி வெளியான போஸ்டர் மாதிரியான பொம்மைகளை அஜித் ரசிகர் ஒருவர் செய்துள்ளார். மதுரையை சேர்ந்த இளைஞர் உருவாக்கி உள்ள இந்த பொம்மை விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

`விவேகம்’ படத்தில் அஜித்துடன் இணைந்து காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top