சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்களில் 90 சதவீத படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. ஒரு சில படங்கள் மட்டுமே அவரது காலை வாரியது. ஆனால் பாவம் அதற்கும் சேர்த்து ரஜினியே நஷ்ட ஈடு கொடுத்து விடுவார்.
ரஜினிகாந்த் நடிப்பில் சமீப காலமாக வெளியாகும் படங்களில் பெரும்பாலும் அவரது பழைய சுறுசுறுப்பு இல்லை என்ற பரவலான கருத்துக்கள் நிலவி வந்த நிலையில் பேட்ட திரைப்படம் அதையெல்லாம் மாற்றி விட்டது.
ஆனால் அதன் பிறகு வந்த தர்பார் படம் சுமாரான வெற்றியைகூட பெறவில்லை. இதன் காரணமாக தற்போது அண்ணாத்த படத்தை பெரிதும் நம்பியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் கண்டிப்பாக படம் மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இந்த மாதிரி முன்னணி நடிகர்களின் படங்கள் கொடுத்தால் கூட தப்பித்து விடுவார்கள். ஆனால் ஒரே ஒரு தோல்விப்படம் கொடுத்தால் அது காலத்துக்கும் பேசப்படும்படி படு மொக்கையான படத்தை கொடுத்து விடுவார்கள்.
அப்படி கடந்த சில வருடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அமைந்த திரைப்படம்தான் லிங்கா. கேஎஸ் ரவிக்குமார் ரஜினி கூட்டணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகி முதல் நாள் முதல் காட்சியை கூட தாண்டாத படமாக மாறியது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா நடித்திருந்தார்.
ரஜினி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் மிகப் பெரிய நடிகையாக உருவெடுத்து விடலாம் என கனவில் வந்த சோனாக்ஷி சின்கா(39) லிங்கா என்ற ஒரே ஒரு படத்துடன் காணாமல் போய்விட்டார். தற்போது அவரை மீண்டும் தென்னிந்திய சினிமா பக்கம் அழைத்து வர முயற்சிகள் செய்து வருகின்றனர்.