fbpx
Connect with us

Cinemapettai

ரஜினிகாந்த், தனுஷிற்கு அடுத்து சித்தார்த்

News | செய்திகள்

ரஜினிகாந்த், தனுஷிற்கு அடுத்து சித்தார்த்

siddharthதமிழ் நடிகர்களைப் பொறுத்தவரையில் டிவிட்டரில் ரஜினிகாந்தைத் தொடர்பவர்கள்தான் அதிகம் பேர் உள்ளனர். அவரை இதுவரை 27 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்கிறார்கள். அதற்கடுத்து இரண்டாவது இடத்தில் தனுஷ் உள்ளார். அவரை 24 லட்சம் பேர் தொடர்கிறார்கள். மூன்றாவது இடத்தில் நடிகர் சித்தார்த் உள்ளார். அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை நேற்று 20 லட்சத்தைக் கடந்தது. 2 மில்லியன் கிளப்பில் தற்போது சித்தார்த்தும் இடம் பிடித்து விட்டார்.

நடிகைகளில் த்ரிஷா ஏற்கெனவே 2 மில்லியன் கிளப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அடுத்து சித்தார்த்தின் முன்னாள் காதலியாக கிசுகிசுக்கப்பட்ட  சமந்தா 2 மில்லியன் கிளப்பைத் தொட உள்ளார். அதற்கு அவருக்கு இன்னும் 70000 தொடர்பாளர்கள்தான் தேவை. மூன்றாவது இடத்தில் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட தொடர்பாளர்களுடன் ஹன்சிகா உள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் 1 கோடி தொடர்பாளர்களுடன் தமிழ்த் திரையுலகில் தனி சாதனையுடன் டிவிட்டரில் முன்னணியில் உள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top