சென்னையில் உள்ள பிஎஸ்பிபி(PSBB) என்கிற பத்மா சேஷாத்திரி பள்ளியில் பணியாற்றும் ராஜகோபாலன் என்பவர் ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையில் தோன்றி மேலும் பள்ளி மாணவிகளை அந்த மாதிரி தொல்லைகளுக்கு உட்படுத்தியதாக செய்திகள் வெளியானது.
அதனைத் தொடர்ந்து தற்போது பிஎஸ்பிபி பள்ளியை வளைத்து வளைத்து நோண்டி நொங்கு எடுத்துக் கொண்டிருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. மேலும் அதில் இன்னும் பெரிய தலைகள் பலர் சிக்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் 96, கர்ணன் போன்ற படங்களில் நடித்த கௌரி கிஷன் என்ற நடிகையும் அடையாறில் உள்ள ஹிந்து சீனியர் செகண்டரி பள்ளியில் தனக்கு இப்படி ஒரு கொடுமை நடந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சென்னையில் மிகவும் பிரபலமான அதேநேரத்தில் நம்பர் ஒன் பள்ளியாக இருக்கும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆனந்தன் என்ற ஆசிரியர் மாணவிகளைப் பாலி*ல் இச்சைகளுக்கு உட்படுத்தியதாக மாணவிகள் பலர் ஒன்று சேர்ந்து கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளனர்.
ஆன்லைன் வகுப்புகளை அட்வான்டேஜாக எடுத்துக் கொண்டு மாணவிகளிடம் ஆசிரியர்கள் தவறாக நடந்து கொள்வது அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இன்னும் இதுபோன்று எத்தனை வாத்தியார்கள் இருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.
மேலும் மாணவிகள் கொடுத்த புகாரை தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகம் உடனடியாக ஒரு கமிட்டி அமைத்து அந்த ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று இன்னும் எத்தனை எத்தனை ஆசிரியர்கள் மாணவிகளை சிதைத்து கொண்டிருக்கிறார்களோ.