பிரதீப்புக்கு அடுத்து வினுஷா விஷயத்தை கையில் எடுத்த அச்சு.. எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லன்னு மாட்டிய சில்வண்டு

Bigg Boss 7 Archana: ஒருவர் நல்லவராவதும், தீயவராவதும் அவரை சுற்றி இருக்கும் விஷயங்களை பொருத்தே அமையும் என்பதற்கு ஏற்ப பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதாவது இந்த உலகத்தில் யாருமே ரொம்ப நல்லவங்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை என்பதற்கு உதாரணம் தான் பிக் பாஸில் இருக்கும் போட்டியாளர்களின் நிலைமை இருக்கிறது.

ஆரம்பத்தில் ஒரு சில போட்டியாளர்கள் ஓகே என்று மக்கள் கணித்து வந்தாலும் தற்போது போகப் போக அவர்களுடைய கேரக்டர் பிடிக்காமல் போய்விட்டது. அதாவது பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது தவறு என்று வைல்ட் கார்டு மூலம் போன அர்ச்சனா அங்கே இருந்த போட்டியாளர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்தார்.

அதன் பின் ஓரளவுக்கு இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டிய பின் மறுபடியும் வினிஷா விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார் அர்ச்சனா. இவரை பொறுத்தவரை இவர் மீது யாரும் குறை சொல்லிட கூடாது. அத்துடன் இவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி விடவும் கூடாது. அப்படி இருந்தால் அர்ச்சனா மற்றவர்களுக்கு நல்லவராக இருப்பார். தப்பி தவறி இவரை யாராவது பாயிண்ட் அவுட் பண்ணி பேசிவிட்டால் அவர்களுடைய நிலைமை அதோ கெதி தான் என்பதற்கு ஏற்ப மாறிவிடுகிறது.

Also read: அர்ச்சனாவின் முகமூடியை கிழித்தெறியும் லீலையின் மன்னன்.. சொதப்பலாக வரும் பிக் பாஸ் சீசன் 7

கடந்த இரு தினங்களுக்கு முன் பிக் பாஸ் வீட்டிற்குள் பள்ளிக்கூடம் டாஸ்க் நடைபெற்றது. அதில் நிக்சன் மனதில் பூட்டி வைத்திருந்த அனைத்தையும் உடைக்கும் விதமாக அர்ச்சனா மற்றும் தினேஷை ஜாடமடையாக குற்றம் சாட்டி பேசி இருந்தார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத அர்ச்சனா, வினுஷா விஷயத்தை கையில் எடுத்து விட்டார்.

இதற்கு நிக்சன் எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லன்னு என்பதற்கு ஏற்ப அர்ச்சனா பேசியதை தாங்கிக் கொள்ள முடியாமல் சில்வண்டு மாதிரி வாய்க்கு வந்தபடி வன்மத்தை கக்கி விட்டார். அர்ச்சனாவை பார்த்து நீ எல்லாம் என்ன பொண்ணு, கருமம், சீ, வாய மூடு, சொருகிடுவேன் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டும் அளவிற்கு பேசி விட்டார். என்னதான் நிக்சன் பாயிண்ட் நேற்று சரியாக இருந்தாலும் இன்று அர்ச்சனாவிடம் இந்த மாதிரி பேசுனது முற்றிலும் கண்டிக்கத்தக்க விஷயம்.

அர்ச்சனாவின் முகத்திரையை கிழித்து காட்டுகிறேன் என்று வந்த நிக்சனின் உண்மையான முகம் கடைசியில் அம்பலம் ஆகிவிட்டது. அந்த வகையில் இவர் பேசியதற்கு ரெட் கார்டை கொடுக்கலாம் என்பதற்கு ஏற்ப மக்கள் ஒவ்வொருவரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். இதற்கிடையில் இந்த வாரம் யாரும் எலிமினேஷன் இல்லை என்பதற்கு ஏற்ப நோ எலிமினேஷன் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Also read: பிக் பாஸ் சீசன் 7ல் அதிகம் பேசப்பட்ட டாப் 5 பிரபலங்கள்.. வரலாற்றையே புரட்டி போட்ட கிளாமர் குயின்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்