Tamil Cinema News | சினிமா செய்திகள்
எம்ஜிஆர் படங்களுக்கு பிறகு அதிகம் விரும்பி பார்ப்பது விஜய் படம்தான்.. சிலாகித்து கூறிய இந்திய பிரபலம்
தற்போதைய தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக கலக்கி வருபவர் தளபதி விஜய். நாளுக்கு நாள் விஜய்க்கு ரசிகர் பட்டாளங்கள் பெருகிக்கொண்டே வருகின்றன.
அது மட்டுமில்லாமல் சினிமாவில் நிறைய பிரபலங்கள் தளபதி விஜய்யின் ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் விஜய்யின் வெறித்தனமான ரசிகராக இருப்பவர் மூத்த நடிகரும் சிறந்த குணச்சித்திர நடிகருமான சத்யராஜ்.
கட்டப்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் இந்திய சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர். பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற ஒரு கேள்வியின் மூலம் சத்யராஜ் உலகப் பிரபலமடைந்தார்.
அப்படிப்பட்ட சத்யராஜ் மிகத் தீவிரமான எம்ஜிஆர் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அவரைப் பார்த்துதான் சினிமாவில் வர வேண்டும் என ஆசை வந்ததாகவும் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் எம்ஜிஆருக்கு பிறகு நான் அதிகம் விரும்பிப் பார்க்கும் நடிகர்களின் படம் என்றால் அது விஜய் படம்தான் என தெளிவாக கூறியுள்ளார்.
எம்ஜிஆர் படங்களைப் போலவே சமூக கருத்து, ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் என அனைத்தும் கலந்து இருப்பதால் அவரது படங்களை விரும்பிப் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
மேலும் சத்யராஜின் மகன் நடிகர் சிபிராஜ்ஜும் தளபதி விஜய்யின் வெறித்தனமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
