விஜய்யுடன் ஒரே படம்தான்.. மாளவிகா மோகனன் காட்டில் அடைமழை.. அடுத்த பட சம்பளத்தை கேட்டு அலண்டு போன நடிகைகள்

தமிழ் சினிமாவில் தற்போது சென்சேஷனல் ஹீரோயினாக மாறியிருப்பவர் மாளவிகா மோகனன்(malavika mohanan). அடுத்தடுத்து அவர் பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இன்னும் படமே வெளிவரவில்லை ஆனால் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் மாளவிகா மோகனன் அடுத்ததாக ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க உள்ளார். மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி நடித்த மாம் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார்.

முழுக்க முழுக்க ஆக்ஷன் கதாபாத்திரம் என்பதால் அதற்காக தற்போது மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொண்டிருக்கிறாராம். மேலும் அவரின் சம்பளத்தை கேட்டால்தான் தலை சுற்றுகிறது.

மூன்று மாத கால சீட்டுக்கு சுமார் 5 கோடி சம்பளம் கொடுக்கப்படவுள்ளதாம். இதனை பார்த்த மற்ற நடிகைகள் பொறாமையில் பொங்கி வழிகிறார்களாம்.

ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருந்தாலும் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த பிறகுதான் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் ஒரு படமும், விக்ரமுடன் ஒரு படமும் நடிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. நாலு கோடி சம்பளம் கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.