நாங்களும் மாஸ்டருக்கு இணையா வசூல் செய்வோம்.. புலியை பார்த்து சூடு போட்டுக் கொள்ளப்போகும் முன்னணி ஹீரோ?

தமிழ் சினிமாவில் சரித்திர சாதனை படைத்த திரைப்படங்களில் ஒன்று விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான மாஸ்டர். 50 சதவீத பார்வையாளர்களை வைத்துக்கொண்டே 200 கோடிகளுக்கும் மேல் வசூல் சாதனை செய்தது.

இது மற்ற நடிகர்களுக்கு சாத்தியமா என்றால் சந்தேகம்தான். மாஸ்டர் படத்திற்கு பிறகு வெளியான படங்கள் அனைத்துமே ஒரு சதவிகித பார்வையாளர்களை கொண்டு வெளியானதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. அதில் சுல்தான் மற்றும் கர்ணன் போன்ற படங்கள் நல்ல லாபத்தை ஈட்டியது.

கர்ணன் படம் மட்டும் முதல் நாள் நூறு சதவீத பார்வையாளர்களும் அதற்கு அடுத்த நாளிலிருந்து 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளில் ஓடியது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து தியேட்டர்களில் வெளியாக இருந்த சில திரைப்படங்கள் தற்போது பின்வாங்கி விட்டன.

ஆனால் தலை கீழாகத்தான் குதிப்பேன் என முடிவு எடுத்து தன்னுடைய அடுத்த படத்தை தியேட்டரில் வெளியிட முடிவு செய்துள்ளார் விஜய் சேதுபதி. மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன் மற்றும் விஜய்சேதுபதி கூட்டணியில் உருவான லாபம் திரைப்படம் ரம்ஜான் விழாவை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

வெறும் 50 சதவீத பார்வையாளர்களை நம்பி மட்டுமே இந்த படம் களமிறங்குகிறது என்பதும் கூடுதல் தகவல். அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் படத்தில் கிடைத்த வரவேற்பு போல லாபம் படத்திற்கும் கிடைக்கும் என நம்புகிறாராம் விஜய் சேதுபதி.

ஆனால் விஜய்யின் ஓப்பனிங் கலெக்சன் வேறு, விஜய் சேதுபதியின் ஓபனிங் கலெக்சன் வேறு. அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சோலோ ஹீரோ படங்கள் எதுவுமே பெரிய அளவு வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. போதாக்குறைக்கு சொந்த தயாரிப்பு வேறு, கடவுள்தான் காப்பாத்தனும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

laabam-cinemapettai
laabam-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்