Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திருமணத்துக்கு பிறகு நடிக்க வந்து வெற்றி பெற்ற முன்னணி நடிகை… திரைத்துறையில் ஒரு சுவாரசியம்

tamil actress

தமிழ் சினிமாவில் சினிமாவிற்கு பிறகு நடிக்க வந்த நடிகைக்கு, முன்னணி நடிகையாகும் லக் கிடைத்து இருக்கிறது என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

கோலிவுட்டில் திருமணத்திற்கு முன்பு தான் நாயகிகளுக்கு மார்க்கெட் இருக்கும் என பரவலாக பேசப்படுகிறது. எவ்வளவு பெரிய நாயகியாக இருந்தாலும், திருமணத்தை முடித்து விட்டால், அவ்வளவு தான் அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திரத்துக்கே பல வாய்ப்புகளும் கேட்க தொடங்குவர். ஆனால், ஒரு நடிகை திருமணம் முடிந்து அறிமுகமாகி, இன்று பலர் மனதிலும் பிரபலமாக இருக்கிறார். யார் அவர்? பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி தான்.

சென்னை ஆல் இந்தியா ரேடியோவில் ரேடியோ ஆர்டிஸ்ட் வேலை செய்து கொண்டிருந்தவர் ஜானகி. இவரின் குரலை கேட்ட, வாணி ஸ்டூடியோ அதிபர் பி.எம்.ரெட்டி தனது படத்தில் இவரை நடிக்க வைக்க விசாரித்து இருக்கிறார். இந்த மகிழ்ச்சியான விஷயத்தை வீட்டில் சொன்ன ஜானகிக்கோ அதிர்ச்சி தான் காத்திருந்தது. வேலைக்கு சென்றதால் தானே இந்த வாய்ப்பெல்லாம் வருகிறது என யோசித்த அவர் பெற்றோர்கள் உடனே திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். திருமணம் முடிந்த கையோடு, அவர்கள் அசாம் சென்று விட்டனர். ஒரு கட்டத்தில் தனது கணவருக்கு எந்த வேலையும் இல்லாமல், பெற்றோரிடம் உதவி கேட்டு செல்லும் சூழ்நிலை வரை அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

ஒரு கட்டத்தில், கணவரிடமே தான் நடிக்க செல்லவா என கேட்டு இருக்கிறார். அங்கு சாய்ஸுக்கெல்லாம் வழி இல்லாமல், கணவரின் ஒப்புதலுடன் நடிக்க வந்திருக்கிறார். சினிமாவிலும் அவருக்கு சோதனை தான் நிலவியது. பல மாதங்களாக காத்திருந்தார். அவர் அறிமுக படமான சௌகார் படத்திற்கும் ஆடிஷன் முடித்து விட்டு, இரண்டு மாதங்கள் கழித்து தான் முதல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்.டி.ராமராவுடன், ஜானகி அறிமுகமான முதல் படமே மாஸ் ஹிட் அடித்தது. இப்படம் தான் வெறும் ஜானகியை சௌகார் ஜானகியாக வெற்றி பெற வைத்தது. இதை தொடர்ந்து, அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு என பல வாய்ப்புகள் வந்தது.

தெலுங்கு பெண்ணாக இருந்தாலும், தனக்கு வாழ்க்கை கொடுத்தது என்னவோ தமிழ் சினிமா மட்டும் தான் என்பதை பல இடங்களில் சொல்லிக் கொண்டே இருப்பவர் ஜானகி. இப்போ சொல்லுங்க மக்கா! உழைப்பு போதும் இதில் திருமணம் எல்லாம் ஒரு தடை இல்லை தானே!

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top