ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் சார்பாக G. விவேகானந்தன் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் “குற்றப்பயிற்சி”. தாரைத் தப்பட்டை படத்தில் இயக்குநர் பாலாவிடம் பணியாற்றிய வர்ணிக் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

trisha

1980 காலகட்டத்தின் பின்னணியில் நடக்கும்படி அமைக்கபட்டிருக்கும் இத்திரைப்படத்தில், பெண் துப்பரிவாளராக முதன்மை கதாப்பாத்திரம் ஏற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை திரிஷா. மேலும் இப்படத்தில் , சுரபி, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

trisha

ஒரு உண்மைசம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் கதை ஒரு கொலையும், கொலையின் பின்னணியும் துப்புதுலக்கும் விதமாக விருவிருப்பான திரைக்கதை அமைத்து உருவாகியுள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் படத்தின் முதன்மை கதாப்பாத்திரம் பெண் துப்பரிவாளராக நடிப்பது இதுவே முதல் முறை. முதல் இந்திய பெண் துப்பரிவாளரான ரஜினி பண்டித் அவர்களை உத்வேகமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

priyamani

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ப்ரியாமணி ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.திருமணத்திற்கு பிறகு தமிழில் ப்ரியாமணி நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.