fbpx
Connect with us

உலககோப்பை போட்டி கொடுத்த ஓய்வுகள்.. மலிங்காவை அடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் குட்பை சொல்கிறார்

after-malinga-another-player-retired

Sports | விளையாட்டு

உலககோப்பை போட்டி கொடுத்த ஓய்வுகள்.. மலிங்காவை அடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் குட்பை சொல்கிறார்

இலங்கையை சேர்ந்த யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும் மலிங்கா தனது ஓய்வை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து இலங்கையை சேர்ந்த குலசேகராவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது இலங்கை ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. திறமை வாய்ந்த அனுபவமிக்க வீரர்கள் இலங்கை அணியில் இல்லாத சூழ்நிலையில் தற்போது இவர்கள் ஓய்வு பெறுவது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் வென்ற அணியில் குலசேகரா இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 188 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய குலசேகரா, 199 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய குலசேகரா 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

20 ஓவர் போட்டிகளில் 58 போட்டிகளில் கலந்துகொண்ட குலசேகரா விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் இவர் கைது செய்யப்பட்டார். இவரின் இந்த திடீர் முடிவு இலங்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top