Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபுதேவாவுடன் மீண்டும் இணையும் நயன்தாரா.. அடிவயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் சர்ச்சை நடிகர்களுக்கு மத்தியில் நானும் சளைத்தவள் அல்ல என தன்னுடைய சர்ச்சை விஷயங்களில் மிகவும் பிரபலமானவர் நடிகை நயன்தாரா. அதுவும் காதல் சர்ச்சை என்றால் சும்மாவா. கொடி கட்டிப் பறந்தது அம்மணியின் மானம்.
அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தற்போது நம்பர்-1 நாயகியாக வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் அம்மணி தான் தற்போதைக்கு அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின்.
நடிகர் சங்கத்திற்காக நடிகர் விஷால் மற்றும் கார்த்திக் இருவரும் இணைந்து கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்ற படத்தில் நடிக்க இருப்பதாக அப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்தன.
இந்நிலையில் விஷால் இடையில் புகுந்து ஆடையைக் குழப்பிவிட்டதால் தற்போது விஷாலுக்கும் கார்த்திக்கும் இடையில் சங்கடம் ஏற்பட்டு உள்ளதாம். இருந்தாலும் இந்த படத்தை எப்படியாவது தயாரித்து ஆகவேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உறுதியாக இருக்கிறாராம்.
விஷாலை கழற்றிவிட்டு கார்த்தியை வைத்து அந்த படத்தை இயக்க ரெடியாகிவிட்டார் பிரபுதேவா. இங்குதான் விதி விளையாட உள்ளது. தற்போது சிம்பு பிரபுதேவா ஆகியோருக்குப் பிறகு மூன்றாவது முறையாக விக்னேஷ் சிவனுடன் காதலில் வலம் வருகிறார் நயன்தாரா.
இந்நிலையில் மீண்டும் பிரபுதேவா படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துள்ளதாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார். இந்த விஷயம் விக்னேஷ் சிவனுக்கு அடி வயிற்றில் புளியை கரைத்துள்ளதாம். மீண்டும் நயன்தாரா பிரபுதேவாவுடன் கிளம்பி விடுவாரோ என அச்சத்தில் இருக்கிறாராம்.
இதனால் பெரும்பாலும் அந்த படத்துக்கு முட்டுக்கட்டை போட தான் விக்னேஷ் சிவன் பார்ப்பார் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் கிளம்பியுள்ளது. ஏற்கனவே விக்னேஷ் சிவனை காதலித்துக் கொண்டிருக்கும் போது சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் நயன்தாரா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
