Leo Movie: இன்றைய காலகட்டத்தில் சினிமா என்பதுதான் மிகப்பெரிய வியாபாரமாக இருக்கிறது. பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றாலே அதன் வியாபாரம் சூதாட்டத்திற்கு சமமானதாக ஆகிவிடுகிறது. படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ அந்த ஹீரோவின் பெயரை வைத்து படத்தை விற்றுவிடுகிறார்கள். விநியோகஸ்தர்களிலிருந்து, தியேட்டர் உரிமையாளர்கள் வரை ஹீரோவின் பெயரை வைத்து சம்பாதித்து விடுகிறார்கள்.
பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் பொழுது அந்த முதல் நாள் எப்போதுமே கொண்டாட்டமாக தான் இருக்கும். படத்தின் உண்மை நிலவரம் என்ன என்பது ஒரு வாரம் கழித்து தியேட்டர் உரிமையாளர்களுக்கு தான் தெரியும். இதனால்தான் எப்போதுமே படத்தின் வியாபாரத்தில் விநியோகஸ்தர்கள் தரப்பிற்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.
விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இடையேயான ஷேர் என்பது 60 :40 என்னும் விகிதத்தில் தான் இருந்து வந்தது. லியோ படத்தில் தான் முதன்முறையாக முதல் ஒரு வாரத்தின் வசூலில் 80 சதவீதத்தை தயாரிப்பாளர் தரப்பிற்கு கொடுக்க வேண்டும் என பஞ்சாயத்து நடைபெற்றது. இதனால் லியோ பல முக்கிய தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாது எனக் கூட அறிவுப்பு வந்தது.
நாளை ரிலீஸ் என்று இருந்த நிலையில் கூட பல தியேட்டர்களில் புக்கிங் ஆரம்பிக்கப்படாமல் இருந்தது விஜய் ரசிகர்களுக்கு பக் என்று இருந்தது. சென்னையின் முக்கிய தியேட்டர்களான வெற்றி மற்றும் ரோகினியில் லியோ ரிலீசாகாது என அறிவிப்பை வெளியிட்டு விட்டார்கள். அதன் பின்னர் பேச்சு வார்த்தை நடைபெற்று ஒரு முடிவுக்கு வந்து படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
மீண்டும் இது போன்ற பிரச்சனை வரக்கூடாது என தியேட்டர் உரிமையாளர்கள் இணைந்து ஒரு முடிவெடுத்து இருக்கிறார்கள். அந்த முடிவில் இனி அறுபது சதவீதத்திற்கு மேல் விநியோகஸ்தர்களுக்கு ஷேர் கொடுக்க முடியாது. வெற்றி பெறாத படங்களுக்கு 75% ஷேர் கொடுத்தால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு தான் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
பெரிய ஹீரோக்களின் பெயரை வைத்து தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் படத்தை விற்று விடுகிறார்கள் உண்மையில் படம் வெற்றி பெறாத பாதிக்கப்படுவது தேற்றறி உரிமையாளர்களாகத்தான் இருக்கிறார்கள் லியோ படத்தின் போது ஏற்பட்ட பெரிய பஞ்சாயத்தினால் அவர்கள் திட்டவட்டமாக இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறார்கள்