கமலுக்கு பிறகு சகலகலா வல்லவன் என்று பெயர் எடுத்தவர்.. நடுவில் கொஞ்சம் கட்டம் சரியில்லை.

நடிகர் கமல் நடிப்பு, நடனம், பாட்டு, இயக்கம் என அனைத்திலும் வல்லவர். தான் நினைத்ததை செய்து முடிக்கும் சகலகலா வல்லவர். இவர் கருப்பு வெள்ளை காலம் முதல் டிஜிட்டல் காலம் வரை பல சாதனைகள் புரிந்துள்ளார். களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார்.

கமலைப் போலவே சிம்புவும் தனது ஐந்து வயதிலிருந்தே திரைப்படங்களில் நடித்துவருகிறார். சிம்பு தனது 25 வயதுக்குள்ளேயே நடிகர், திரைக்கதை, இயக்கம், பாடல், நடனம் என அனைத்து முக்கியத் துறைகளில் தடம் பதித்து சகலகலா வல்லவனாக இருந்தார். நடிகர் சிம்பு அவருடைய தந்தை டி ராஜேந்திரன் கரங்களை பிடித்து திரைத்துறையில் கால் பதித்தார்.

Simbu-Cinemapettai.jpg
Simbu-Cinemapettai.jpg

சிம்பு கோவில், குத்து, மன்மதன் என அடுத்தடுத்து படங்களில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்தார். வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தை பிடித்தார். அதன்பிறகு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். உச்சத்தில் இருந்தபோது இடைப்பட்ட காலத்தில் காணாமல் போனார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு மீண்டும் புதுப்பொலிவுடன் வந்தார். கமலைப் போலவே சிம்புவும் எந்த வேடத்திற்கும் பொருந்திப்போகும் உடலமைப்பு மற்றும் மாஸ் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களையும் பொருத்திக்கொண்டவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக கமலைப் போலவே பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார் சிம்பு. அவர் காதலித்த நடிகைகளை விட ,சிம்புவை காதலிக்காத நடிகைகளே கிடையாது. கமலுக்கு அடுத்ததாக சகலகலா வல்லவன் என்ற பெயரை எடுத்தவர்  சிம்புதான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்