Connect with us
Cinemapettai

Cinemapettai

jyothika-keerthy-suresh-cinemapettai

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

பேரமே பேசாமல் கோடிகளில் வளைக்கும் OTT.. ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து இவரும் சேர்ந்துட்டார்

OTT இல் படத்தை ரிலீஸ் பண்ணும் தயாரிப்பாளர்களை தியேட்டர்காரர்கள் ஏதோ கொலை செய்தவர்களை போல வெறுப்புடன் பார்த்து வருகிறார்கள். தயாரிப்பாளர்களும், சின்ன படங்களுக்கு நீங்க தியேட்டர் கொடுத்தா, நாங்க ஏன் OTT பக்கம் போறோம் என கிண்டலாக பார்க்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தனது சொந்த தயாரிப்பில் மனைவி ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்மகள் வந்தாள் படத்தை OTT தளத்திற்கு விற்றார். மே மாதம் 29ஆம் தேதி அந்த படம் அமேசான் ப்ரைமில் பொன்மகள் வந்தாள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த பெண் குயின் படமும் முடிந்து நீண்ட நாட்களாகிவிட்டது. அதையும் கார்த்திக் சுப்புராஜ் அமேசானுக்கு விற்றுவிட்டார். பெண் குயின் படமும் வருகிற ஜூன் மாதம் 19ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவர்களைத் தொடர்ந்து அனுஷ்கா மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் நிசப்தம் படமும் OTT தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாம். இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து படம் அமேசானுக்கு விற்கப்பட்டதாக செய்திகள் கிடைத்துள்ளது.

கோடிகளில் கொட்டிக் கொடுக்கும் அமேசானுக்கு சிறிய பட்ஜெட் படங்களை தள்ளி விடுவதில் தயாரிப்பாளர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Continue Reading
To Top