சுதா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த இறுதிச்சுற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இப்படத்தை பார்த்த மணிரத்னம், தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த சுதா தற்போது தனக்கென ஒரு தனித்துவத்தை பெற்று விட்டார் என கூறினார்.

அதிகம் படித்தவை:  விக்ரம் வேதா படத்தில் நடித்திருக்க வேண்டியது இவர் தானாம்.

இது மட்டுமின்றி மாதவன் இனி மாதவன் தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்,(மாதவன் 4 வருடங்களாக தமிழில் நடிக்காமல் வட இந்திய படங்களில் கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது).

அதிகம் படித்தவை:  சார்லி படத்தின் தமிழில் ரீமேக் உறுதியானது- நடிகர்,இயக்குனர் விவரம் உள்ளே

மேலும், ரித்திகாவின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருந்தது, முதல் படம் போன்றே தெரியவில்லை, இப்படக்குழுவினர்கள் அனைவரும் உடனே அடுத்த படத்தை தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.