ரகுமான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘துருவங்கள் 16’. இப்படத்தில் ரகுமான் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இதில் ரகுமானின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. குறிப்பாக பத்திரிகையாளர்களும், ஊடகங்களும், இணையத்தளங்களும் ரகுமானின் நடிப்பை பாராட்டிய வண்ணம் உள்ளனர். இப்படத்தை தொடர்ந்து ரகுமான் நடிப்பில் ‘பகடி ஆட்டம்’ படம் உருவாகி வருகிறது.

இதில் ரகுமான் துப்பறியும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போதுள்ள சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் மக்கள் அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்த சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை துப்பறிந்து வெளிச்சத்துக் கொண்டுவரும் கதாபாத்திரத்தில் ரகுமான் நடிக்கிறார். பெண்களுக்கு விழிப்புணர்வு கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ராம் கே.சந்திரன் இயக்கியுள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

‘பகடி ஆட்டம்’ படத்தை குமார் டி.எஸ், கே.ராமராஜ், டி.சுபாஷ் சந்திரபோஸ், ஏ.குணசேகர் ஆகியோர் தயாரித்து வருகிறார்கள். V.T நிறுவனம் இப்படத்தை உலகமெங்கும் வெளியிட இருக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டுள்ளார்.